NDA கூட்டணி தொகுதி பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தை நடைபெற்று கையெழுத்தானது.
2026 சட்டமன்ற தேர்தலுக்கான தேர்தல் நாள் (ஏப்ரல் 23) அறிவிக்க பட்ட நிலையில் தேர்தல்காலம் சூடு பிடிக்க ஆரம்பித்தது. அரசியல் களத்தில் கூட்டணி குறித்த பேச்சுவார்த்தைகள், வேட்பாளர் நேர்காணல் மற்றும் தேர்தல் வாக்குறுதிகள் என பரப்பாக உள்ளது. தற்போது NDA (தேசிய ஜனநாயக கூட்டணி) தொகுதி பக்கீடு தொடர்பான இறுதிக்கட்ட பேச்சுவார்த்தை இன்று நடைபெற்றது. இதில் மூன்று கட்சிகளுக்கு மற்றும் எத்தனை தொகுதிகள் என்பது முடிவாகியுள்ளது.
இதில் பாஜக-விற்கு 27 தொகுதிகளும் , அன்புமணி தலைமையிலான பாமக-விற்கு18 தொகுதிகளும் மற்றும் TTV தினகரன் தலைமையிலான அமமுக கட்சிக்கு 11 தொகுதிகளும் என அறிவிப்புகள் வெளியாகியுள்ளது.
எடப்பாடி பழனிசாமி டெல்லி சென்று வந்த நிலையில் NDA கூட்டணியின் அடுத்தடுத்த தேர்தல் பணிகள் தொடங்கியது. இந்நிலையில் பாஜக தேர்தல் பொறுப்பாளர் பியூஸ் கோயல் தமிழகம் வந்துள்ளார். சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக அலுவலகத்தில், நடக்கவிருக்கும் சட்டமன்ற தேர்தலுக்கான தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். மேலும் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் அன்புமணி, அமமுக கட்சியின் பொது செயலாளர் தினகரன் மற்றும் கூட்டணி காட்சிகளின் தலைவர்கள் ஆகியோர் அதிமுக தலைமை எடப்பாடி பழனிசாமியுடன் ஆலோசித்த பின் கூட்டணி ஒப்பந்தம் கையெழுத்தானது. இந்த சந்திப்பில் 9 ஆண்டுகளுக்கு பிறகு அதிமுக அலுவலகத்திற்கு அமமுக பொது செயலாளர் TTV தினகரன் வருகை என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் அமமுக கட்சி குக்கர் சின்னத்தில் போட்டியிடுவதாக முடிவு.
234 தொகுதிகளில் 56 தொகுதிகள் கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ள நிலையில் மீதம் இருக்கும் கூட்டணி கட்சிகளுக்கு தொகுதி பங்கீடு குறித்து இன்னும் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக தெரிவித்தார். அதையடுத்து “இன்று இரவுக்குள் அனைத்து கட்சிகளுக்கும் தொகுதி பங்கீடு செய்யப்படும், அதுகுறித்து அறிவிப்புகளும் வெளியிடப்படும்” எனவும் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார். மேலும் NDA கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை எனவும் குறிப்பிட்டார்.
இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த பியூஸ் கோயல் “NDA கூட்டணி தமிழகத்தில் ஆட்சி அமைக்க மக்கள் விரும்புகிறார்கள் என்றுகுறிப்பிட்டுள்ளார். பாமக-விற்கான தொகுதி பங்கீடுகள் முடிந்த நிலையில் செய்தியாளர்களை சந்தித்த அன்புமணி “விரைவில் வேட்பாளர்கள் குறித்தும் தொகுதிகள் குறித்தும் அறிவிக்கப்படும் என்று தெரிவித்தார்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.