தமிழ்நாடு

’ நீட் தேர்வு உண்ணாவிரத போராட்டம்’ தேதி மாற்றம்: திமுக இளைஞர் அணி அறிவிப்பு...!

Malaimurasu Seithigal TV

மதுரையில் நாளை நடைபெறவிருந்த திமுகவின் உண்ணாவிரதப் போராட்டம் 23 ஆம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது.

மதுரையில்  நீட் தேர்வை மத்திய பாஜக அரசு திரும்ப பெற வலியுறுத்தியும், ஆளுநரை கண்டித்தும் திமுக இளைஞர் அணி சார்பில் உண்ணாவிரத போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டது.

இந்நிலையில் பழங்காநத்தம் ரவுண்டானாவில் நாளை போராட்டம் அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது 23ஆம் தேதி மாற்றி அறப்போராட்டம் நடத்தப்போவதாக இளைஞரணி, மாணவரணி, மருத்துவர் அணி சார்பில் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டு மாணவர்களின் மருத்துவ கனவை சிதைத்து உயிரைப் பறிக்கும் நீட் தேர்வை மத்திய பாஜக அரசு திரும்ப பெற வலியுறுத்தியும், ஆளுநரை கண்டித்தும் வரும் ஆக்.20 ஞாயிற்றுக்கிழமை பழங்காநத்தம் ரவுண்டானாவில் நடைபெற இருந்த உண்ணாவிரத அறப்போராட்டம் 23-ஆம் தேதிக்கு மாற்றி அமைக்கப்பட்டு இருப்பதாக மதுரை மாவட்ட திமுக இளைஞரணி மாணவரணி மருத்துவர் அணி சார்பில் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.