தமிழ்நாடு

”தமிழ்நாட்டின் புற்றுநோயாக நீட் தேர்வு உள்ளது" - தங்கம் தென்னரசு

Malaimurasu Seithigal TV

தமிழ்நாட்டின் புற்றுநோயாக நீட் தேர்வு இருப்பதாக நிதி மற்றும் மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.

விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் திமுக இளைஞரணி சார்பில் நடைபெற்ற நீட் தேர்வுக்கு எதிரான கையெழுத்து இயக்கத்தை அமைச்சர் தங்கம் தென்னரசு துவக்கி வைத்தார்.

அப்போது மேடையில் பேசிய அவர், நீட் நுழைவு தேர்வு வந்த பின் மருத்துவ படிப்பில் அரசு பள்ளி மற்றும் தமிழ் வழி கல்வி பயின்ற மாணவர்களின் எண்ணிக்கை குறைந்து வருவதாக கூறினார்.

தொடர்ந்து பேசியவர், தமிழ்நாட்டின் புற்றுநோயாக நீட் தேர்வு இருப்பதாக நிதி மற்றும் மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.