தமிழ்நாடு

விராலிமலையில் ரூ.76 கோடியில் குழாய்கள் சீரமைக்கும் பணி...அமைச்சர் கே.என்.நேரு தகவல்!

Tamil Selvi Selvakumar

புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை பகுதிகளுக்கு 547 கோடி ருபாய் செலவில் புதிய கூட்டுக் குடிநீர் திட்டம் தயாரிக்கப்பட்டு வருவதாக சட்டப்பேரவையில் அமைச்சர் கே.என். நேரு கூறியிருக்கிறார்.

சட்டப்பேரவையில் கேள்வி-பதில் நேரத்தில், விராலிமலை நகரப் பகுதிக்கு கூடுதலாக காவிரி குடிநீர் வழங்க அரசு ஆவண செய்யுமா எனவும், விராலிமலை ஆகிய பகுதிகளை சேர்த்து ஒரே புதிய குடிநீர் திட்டமாக வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் விராலிமலை சட்டமன்ற உறுப்பினர் சி விஜயபாஸ்கர் கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதிலளித்த நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு, புதுக்கோட்டை, விராலிமலை பகுதிக்கு 547 கோடி ரூபாய் செலவில், புதிய குடிநீர் திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளதாகவும், இதற்கு நிதி பற்றாக்குறை இருப்பதால், தற்போது, 76 கோடி ரூபாய் செலவில், குடிநீர் குழாய்களை சரி செய்து முழுமையாக குடிநீர் வழங்க நடவடிக்கை எடுத்து வருவதாகவும் தெரிவிதார். மேலும், புதிய குடிநீர் திட்டம் முதலமைச்சர் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறினார்.