தமிழ்நாடு

பாதுகாப்பான கொண்டாட்டங்களுடன் பிறந்தது...! 2023 புத்தாண்டு...!

Malaimurasu Seithigal TV

ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 1 ஆம் தேதி ஆங்கில புத்தண்டு கொண்டாடப்படுகிறது. அந்த இனிய நாளை வரவேற்க மக்கள் பல விதமான கொண்டாட்டங்களுடன் புத்தண்டை வரவேற்றனர். 

சென்னை போன்ற பெரு நகரங்களில் மக்கள் ஆட்டம், பாட்டம் கொண்டாட்டங்களுடன் மகிழ்ந்தனர். சென்னை விமான நிலையத்தில் 2023 ஆம் ஆண்டு புத்தாண்டை வரவேற்கும் விதமாக வண்ண அலங்கார விளக்குகளால் அமைக்கப்பட்டு, விமான நிலைய முனையங்கள், மேம்பாலம், நடைபாதைகள், ஆணையக அலுவலகம் முழுவதும் வண்ண மின் விளக்குளால் ஜொலித்தது. மேலும், சென்னை பெசன்ட் நகரில் உள்ள தேவாலயத்தில் நள்ளிரவு கூட்டு பாடல் திருப்பலியில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர். 

அதே நேரம் மக்கள் பாதுகாப்புடன் இருக்க போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அந்த வகையில் தமிழகம் முழுவதும் ஒரு லட்சம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர். மேலும் விபத்து இல்லாத தமிழகம் என்ற நோக்கத்துடன் தமிழகம் முழுவதும் வாகன சோதனைகள் தீவிர படுத்தப்பட்டது. மேலும் இந்த புத்தாண்டு கொண்டாட்டத்தில் விதிமீறிலில் ஈடுபட்ட வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்தனர். புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது இரவில் இரண்டு நபர்களுக்கு மேல் இருசக்கர வாகனத்தில் செல்லக்கூடாது என்று காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டு இருந்தது

இந்நிலையில் சென்னை அண்ணா சாலை பகுதியில் தடுப்புகளை அமைத்து காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது விதிகளை மீறி செயல்பட்டவர்களுக்கு அபராதம் விதித்தும் சரியான உரிமம் இல்லாத பல வாகனங்களை போலீசார் பறிமுதலும் செய்தனர்.