தமிழ்நாடு

தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கு அமல்? கடைகளுக்கு நேர கட்டுப்பாடு விதிக்க வாய்ப்பு?..

வெள்ளி, சனி மற்றும் ஞாயிற்று கிழமைகளில் வழிபாட்டு தலங்களை திறக்க தடை விதிக்க மக்கள் நல்வாழ்வுத்துறை முடிவு செய்தள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இது குறித்த இன்று மாலை வெளியாகலாம் எனவும் கூறப்படுகிறது. 

Malaimurasu Seithigal TV

தமிழகத்தில் கொரோனா பாதிப்புகள் சமீப நாட்களாக அதிகரித்து வருகிறது. இதற்கிடையே  ஒமிக்ரான் பரவலும் வேகமெடுத்துள்ளதால் மக்கள் பீதியில் உள்ளனர். தொற்று பரவலை கட்டுப்படுத்தும் விதமாக  முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அரசு தீவிரப்படுத்தியுள்ளது. இந்நிலையில் அடுத்தடுத்து பண்டிகை நாட்களும் நெருங்குவதால், தொற்று மேலும் பரவக்கூடும் என அஞ்சப்படுகிறது. 

ஒமிக்ரான் பரவலை கட்டுப்படுத்துவதற்கான தடுப்பு நடவடிக்கைகள் குறித்து சென்னை தலைமை செயலகத்தில் மருத்துவ துறை உயரதிகாரிகளுடன் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். 

இந்தநிலையில், இனி வரும்  வெள்ளி, சனி மற்றும் ஞாயிற்று கிழமைகளில் வழிபாட்டு தலங்களை திறக்க தடை விதிக்கப்படலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளது.  மேலும்  தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமலுக்கு வர உள்ளதாகவும்,  பள்ளி, கல்லூரிகளில் இணைய வழியில் வகுப்புகளை நடத்த அறிவுறுத்தப்படவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளன. அதுமட்டுமல்லாது கடைகள் செயல்படுவதில் நேரக்கட்டுப்பாடுகளை அமல்படுத்துவது குறித்தும் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டதாகவும், இதுதொடர்பான அறிவிப்பு இன்று மாலை வெளியாகலாம் எனவும் கூறப்படுகிறது.