தமிழ்நாடு

ஊராட்சி மன்றத் தலைவியாக பதவியேற்ற 90 வயது மூதாட்டி...

நெல்லை மாவட்டம் சிவந்திப்பட்டி ஊராட்சி மன்றத் தலைவியாக தொண்ணூறு வயது மூதாட்டி பெருமாத்தாள் ஊராட்சி மன்றத் தலைவியாக பதவி ஏற்றார்.

Malaimurasu Seithigal TV

திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட சிவந்திப்பட்டி ஊராட்சி மன்ற தலைவராக தொண்ணூறு வயது மூதாட்டி பெருமாத்தாள் ஊராட்சி மன்றத் தலைவியாக பதவி ஏற்றார் . அவருக்கு ஊர் மக்கள் உற்சாகத்துடன் சால்வைகள் அணிவித்து மரியாதை செலுத்தினர். 

இவர் தன்னை எதிர்த்து போட்டியிட்ட அனைத்து வேட்பாளர்களும் டெபாசிட் இழக்கச் செய்தார் 2060 வாக்குகள் பதிவான நிலையில் 1568 வாக்குகள் பெற்று பெருமாத்தாள் வெற்றி பெற்றார். இவருக்கு அடுத்தபடியாக வந்த செல்வராணி 440 வாக்குகளும் அதற்கு அடுத்தவர் உமா என்பவர் 72 வாக்குகளும்  பெற்றார்.

தமிழகம் முழுவதும் ஒன்பது மாவட்டங்களுக்கு ஊரக உள்ளாட்சி தேர்தல் கடந்த 6 மற்றும் 9ம் தேதிகளில் நடைபெற்றது இதற்கான வாக்கு எண்ணிக்கை  12ஆம் தேதி நடைபெற்றது. பெரும்பாலான  இடங்களில் ஆளும் திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளர்கள் வெற்றி பெற்றனர்.

இந்த நிலையில் இன்று காலை 9 மணிக்கு சிவந்திப்பட்டி ஊராட்சி மன்ற அலுவலகத்தில் ஊராட்சி மன்ற தலைவராக அவர் பதவியேற்றார்.