அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் வில்லிவாக்கம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வடசென்னை மேற்கு மாவட்ட நிர்வாகிகளுக்கான ஆலோசனை கூட்டம் சென்னை அயனாவரத்தில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்றது இதில் அக்கட்சியின் பொதுச் செயலாளர் டி டிவி தினகரன் தலைமையில் வரும் 2026 சட்டமன்ற தேர்தல் குறித்து ஆலோசிக்கப்பட்டது. இக்கூட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட அமமுக கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
முன்னதாக செய்தியாளர்களை சந்தித்து அவர் , மத்திய கல்வி கொள்கை வந்து ஐந்து ஆண்டுகள் ஆகிவிட்டது. ஆனால் மாநில கல்விக்கொள்கையை ஆட்சி முடிகின்ற தருவாயில் அறிமுகப்படுத்தியுள்ளனர் மற்றபடி மாநில கல்விக் கொள்கையை விமர்சிக்க ஒன்றும் இல்லை.எம்ஜிஆர் பற்றி திருமாவளவன் கூறியதை அவரே மறுத்துள்ளார். கடந்த ஓராண்டாகவே நண்பர் திருமாவளவன் பேசுவதில் குழப்பங்கள் நிறைந்துள்ளது. முதலில் ஒரு கருத்தை சொல்லி விடுகிறார். அவர் சொல்ல வந்ததை ஏதோ மாற்றி சொல்லி உள்ளார். அதை அத்தோடு விட்டு விடுவோம் எம்ஜிஆரும் ஜெயலலிதாவும் மறைந்தாலும் மக்கள் மனதில் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறார்கள்.
பாஜக தேசிய பொதுசெயலாளர் பி.எல்.சந்தோஷ் சந்திக்க ஓ பன்னீர்செல்வத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டது தொடர்பான கேள்விக்கு, அண்ணன் ஓ பன்னீர்செல்வத்தை மீண்டும் பாஜக கூட்டணியில் கொண்டு வர வேண்டும் இதற்கான முயற்சியை டெல்லி பாஜக தலைவர்கள் மேற்கொள்ள வேண்டும் என்று நான் தொடர்ந்து கூறி வந்தேன். அந்த வகையில் பாஜக தேசிய பொதுச் செயலாளர் சந்தோஷ் ஓ.பன்னீர் செல்வத்திடம் பேசி மீண்டும் கூட்டணிக்கு அழைத்து வந்தால் சந்தோஷம்தான். பாஜக கூட்டணிக்கு ஓ.பன்னீர்செல்வம் வர வேண்டும் என்பது எங்களது விருப்பம். நான் கடந்த ஓராண்டாக தான் தேசிய ஜனநாயக கூட்டணியில் இருக்கிறேன் தேவை ஏற்பட்டால் கண்டிப்பாக சந்திப்பேன். விளம்பரத்திற்காக அவர்களை சந்திப்பது கிடையாது தேவை ஏற்பட்டால் கண்டிப்பாக பி எல் சந்தோஷை சந்திப்பேன்.
சசிகலா, டிடிவி தினகரன் உள்ளிட்டோரை அதிமுகவில் மீண்டும் இணைக்க மாட்டோம் என்று எடப்பாடி பழனிசாமி கூறியிருப்பதற்கு பதில் அளித்த டிடிவி தினகரன் , நான் கட்சி தொடங்கி ஏழு ஆண்டுகள் ஆகிவிட்டது. இதுவரை நாங்கள் எடப்பாடி பழனிசாமியோடு இணைய வேண்டும் என்கிற எண்ணமே எங்களுக்கு கிடையாது. திமுக ஆட்சியை ஓரம் கட்ட வேண்டும் என்பதற்காகத்தான் ஒரு கட்சியின் குடையின் கீழ் தேசிய ஜனநாயக கூட்டணியின் கீழ் நாங்கள் அனைவரும் பயணிக்கிறோம். ஆனால் அமமுக கட்சி எதற்காக துவங்கப்பட்டதோ அந்த இலக்கை அடையாமல் நாங்கள் ஓய மாட்டோம்.
திமுக ஆட்சி திராவிட மாடல் ஆட்சி என்று விளம்பரம் படுத்துகின்றார்கள். ஆனால் சுதந்திரம் ஆகி 75 ஆண்டுகளில் இதுவரை பார்த்திடாத ஒரு மோசமான ஆட்சியாக இந்த நான்கரை ஆண்டு கால ஆட்சி உள்ளது. உறுதியாக 2026 சட்டமன்ற தேர்தலில் இந்த ஆட்சி அகற்றப்பட போகிறது என்பது தான் உண்மை.
போலி வாக்காளர்களை வைத்து தான் பாஜக மீண்டும் ஆட்சி அமைத்ததாக ராகுல் காந்தி குற்றச்சாட்டிற்கு பதில் அளித்த அவர்,
எங்குமே தேர்தலில் தோற்றுப் போகும் கட்சிகள் வழக்கமாக சொல்கின்ற காரணங்கள் தான் இவை. அவர் கூறும் ஆதாரங்களின் அடிப்படையில் அவர் கூறும் கட்சி தான் செய்திருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை எந்த கட்சி வேண்டுமானாலும் செய்திருக்கலாம் குறிப்பாக தமிழகத்தில் 2003 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் இதுபோன்ற வாக்காளர்கள் முறைகேடு நடைபெற்றது அதனை நாங்கள் தடுத்து நிறுத்தினோம் அதில் திமுக வலுவாக உள்ளது தற்போதும் அதனை திமுக செய்து வருகிறது.
இந்தியா என்பது ஒரே தேசம் தமிழர்கள் இந்தியா முழுவதும் பல்வேறு மாநிலங்களில் வாழ்ந்து வருகின்றார்கள் . பல்வேறு மாநிலங்களில் பல தலைமுறைகளாக தங்கி அங்கேயே ரேஷன் கார்டு உள்ளிட்டவற்றைப் பெற்று அந்த மாநிலத்தில் வாக்களித்து வருகின்றார்கள் அதேபோன்றுதான் பிற மாநிலத்தவர்கள் குறிப்பாக உத்தர பிரதேஷ் பீஹார் போன்ற மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் தமிழ்நாட்டில் வசித்து வருகின்றார்கள் அவர்களும் இங்கு ரேஷன் கார்டு உள்ளிட்ட அடையாள அட்டைகளைப் பெற்று இருக்கின்றார்கள் அவர்கள் இங்கு வாக்களிப்பதில் என்ன தவறு உள்ளது என்பதை எனக்கு தெரியவில்லை இந்தியா என்பது ஒரே நாடு அதற்காக நம் பிற மாநிலத்தில் இருந்து வருபவர்களுக்கு கடவுச்சீட்டா கொடுக்க முடியும்.?
தொடர்ந்து மற்ற அரசியல் கட்சிகளைப் போல் அமமுக சார்பில் எப்போது சுற்றுப்பயணம் மேற்கொள்ளப்படும் என்ற கேள்விக்கு பதில் , மற்றவர்கள் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்கள் என்பதற்காக நாங்களும் மேற்கொள்ள வேண்டிய அவசியம் இல்லை நாங்கள் எப்போது தேர்தல் பரப்புரையை மேற்கொள்ள வேண்டும் என்பது எங்களுக்கு தெரியும்.
தொடர்ந்து 2026 சட்டமன்ற தேர்தலில் எந்த தொகுதியில் போட்டியிடப் போகிறீர்கள் என்ற கேள்விக்கு இன்னும் அது பற்றி முடிவு செய்யவில்லை என பதில் அளித்தார்.
தற்போது கம்யூனிஸ்டுகள் உண்மையான கம்யூனிஸ்டுகளாக இல்லை. அவர்கள் எம்எல்ஏ எம்பி சீட்டுகள் கிடைத்தால் போதும் என்று நினைக்கிறார்கள் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் சண்முகம் மற்றும் அவரை மீறி சில உண்மைகளை சொல்லி விடுகிறார். திமுக அரசு சொன்ன வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என்றால் மக்களை சந்திப்பதே கடினம் என்று அவர் கூறியிருக்கிறார். ஆனால் சங்கர் ஐயா நல்லகண்ணு போன்ற கம்யூனிஸ்டுகள் தற்போது இல்லை எம்எல்ஏ எம்பி சீட்டு களுக்காக அவர்கள் பல்வேறு சமரசங்களை செய்து கொள்கின்றனர்
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்..