தமிழ்நாடு

”என்ன விமர்சனம் வந்தாலும் தமிழ்நாடு அமைச்சர்களும், தானும்  நீட் தேர்வுக்கு எதிராக போராடுவோம்” உதயநிதி!

Tamil Selvi Selvakumar

என்ன விமர்சனம் வந்தாலும் தமிழ்நாடு அமைச்சர்களும் தானும்  நீட் தேர்வுக்கு எதிரான போராட்டத்தில் ஈடுபடுவோம் என்று விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார். 

சென்னை நேரு விளையாட்டரங்கில் மணிப்பூர் மாநிலத்திலிருந்து வந்துள்ள விளையாட்டு வீரர் வீராங்கனைகளுக்கான பயிற்சியை விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி தொடக்கி வைத்தார். 
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், நீட் தேர்வை ஒழிப்பதற்கான முழு பொறுப்பையும்  தான் உணர்வதாக கூறினார். தேர்தல் நேரத்தில் கொடுத்த வாக்குறுதியை காப்பாற்ற அனைத்து நடவடிக்கையை எடுப்பதாகவும், அதேபோல் ஒவ்வொருவரும் இதனை உணர வேண்டும் எனவும் கூறினார். 

தொடர்ந்து பேசியவர், என்ன விமர்சனம் வந்தாலும் தமிழ்நாடு அமைச்சர்களும் தானும்  நீட் தேர்வுக்கு எதிரான போராட்டத்தில் ஈடுபடுவோம் என்று கூறியவர், மாணவர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்கள் என அனைவரும் இந்த போராட்டத்தில் பங்கேற்க வேண்டும் என்று அழைப்பு விடுத்தார்.