தமிழ்நாடு

என்ன வேலை இருந்தாலும் கூட ஐயப்பனை கும்பிட தவறவே மாட்டேன் - திமுக அமைச்சர்

அமைச்சர் சேகர்பாபுவும் மாதம்தோறும் தவறாமல் சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு சென்று சுவாமி தரிசனம் செய்து வருகிறார். சமீபகாலமாக அவரது மனைவியும் சபரிமலைக்கு சென்றுதரிசித்து வருகிறார்.

Malaimurasu Seithigal TV

மாதப் பிறப்பின்போது ஐயப்பன்கோவில்

ஒவ்வொரு தமிழ் மாதப் பிறப்பின்போதும், சபரிமலை ஐயப்பன் கோயில் நடைதிறக்கப்பட்டு, 5 நாட்கள் சிறப்பு வழிபாடுகள் நடைபெறும். அப்போதும், ஏராளமான பக்தர்கள் சபரிமலைக்கு புனித யாத்திரை மேற்கொள்வார்கள்.தமிழக இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபுவும் மாதம்தோறும் தவறாமல் சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு சென்று சுவாமி தரிசனம் செய்து வருகிறார். சமீபகாலமாக அவரது மனைவியும் சபரிமலைக்கு சென்றுதரிசித்து வருகிறார்.

நினைவு தெரிந்த நாள் முதல் சபரிமலை ஐயப்பன்

அமைச்சர் சேகர்பாபு கூறியதாவது: நான் நினைவு தெரிந்த நாள் முதல் சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு சென்று வழிபட்டு வருகிறேன். தவறாமல் மாதாந்திர பூஜைக்கும் சென்று வழிபடுகிறேன். 4-வது முறையாக எனது மனைவியும் சபரிமலைக்கு செல்ல இருக்கிறார்.

மக்கள் பணிதான் எனக்கு முக்கியம்

அமைச்சரான பிறகு அதிக அளவில் பணிகள் இருந்தாலும் சபரிமலைக்கு செல்வதை நிறுத்தவில்லை. அதற்கேற்ப, பணிகளை மாற்றிக்கொண்டு தவறாமல் சபரிமலைக்கு சென்று வழிபட்டு வருகிறேன். எனினும், மக்கள் பணிதான் எனக்கு முக்கியம். இவ்வாறு அவர் கூறினார்.