அமைச்சர் உதயநிதிக்கு கொடுக்கும் முக்கியத்துவம் கட்சியில் உள்ள மற்றவர்களுக்கு திமுகவில் கொடுப்பார்களா என புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை கேள்வி எழுப்பியிள்ளார்.
புதுச்சேரி தாவரவியல் பூங்காவில் அப்போது புதுச்சேரியில் தங்கியிருந்த மகாகவி சுப்பிரமணிய பாரதியாரால் வரைந்து கொடுத்த புகைப்படத்தை கொண்டு பிரெஞ்சு கலைஞரால் வடிவமைக்கப்பட்ட பாரதமாதா சிலை நிறுவப்பட்டது.
அது கடந்த 2011 ஆம் ஆண்டு தாக்கிய தானே புயலின் போது சேதமடைந்தது அதை தற்போது புதுப்பிக்கப்பட்டு சுடு மண்ணால் உருவாக்கப்பட்ட பாரத மாதா சிலை மீண்டும் அமைக்கப்பட்டுள்ளது. அதை இன்று புதுச்சேரி ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜன் முதல்வர் ரங்கசாமி ஆகியோர் திறந்து வைத்தனர்.
இதன் பின்பு செய்தியாளர்களை சந்தித்த புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜன்
சனாதனம் என்பதை தவறாக புரிந்து கொண்டுள்ளார்கள் என்றும் ராசா அவரது கட்சியில் முதல்வராகிவிடுவாரா?
உதயநிதிக்கு கொடுக்கும் அங்கீகாரம் மற்றவர்களுக்கு கொடுத்து விடுவார்களா? என்று கேள்வியெழுப்பியவர் இவர்கள் ஒரு பின்பத்தை உருவாக்குகின்றார்கள் சாதி மதம் தான் சனாதனம் என்று ஆனால் சாதிய பாகுபாடு என்பது கிடையாது, சனாதனம் என்பது சமதர்ம சமுதாயம் தான் என்றவர்.
அவர்களின் (திமுக) இயக்கத்திற்குள்ளேயே அவர்களின் குடும்பத்தைச்சார்ந்தவர்களை தாண்டி முக்கியத்துவம் பெற முடியாது, ராஜா ஒரு பதட்டத்தில் பேசுகின்றார். அவர் பேசுவது முற்றிலும் தவறு என்றும்
தமிழிசையோ, அண்ணாமலையோ, இதனால் தான் வரவேண்டும் என்பது இல்லை. பொதுவெளியில் இன்னாரது மகள் என்று சொல்லாமல் நான் வந்துள்ளேன். அதே போல் உயர்பதவிக்கு திமுக வில் வந்து விடமுடியுமா? என்பது தான் என்னுடைய கேள்வி? நீங்கள் திமுக தலைவர் ஸ்டாலினை கேளுங்கள் சனாதனத்தை எதிர்த்து நாங்கள் பேசுகின்றோம் என்னை நீங்கள் தலைவராக ஆக்க வேண்டும் என கேட்டால் நான் ஒத்துக்கொள்கிறேன். அவரது இயக்கத்தில் ராஜா தலைவராகவோ, முதலமைச்சராகவோ வரட்டும் நான் அவரது கருத்தை ஏற்கின்றேன் என்றார் தமிழிசை செளந்தராஜன் தெரிவித்துள்ளார்.
துணைநிலை ஆளுநர் செய்தியாளர்களை சந்தித்த போது திமுக சட்டமன்ற உறுப்பினரை அருகில் அமர வைத்து கொண்டே திமுகவை கடுமையாக விமர்சனம் செய்தது குறிப்பிடத்தக்கது.