தமிழ்நாடு

எடப்பாடி பழனிசாமி சூறாவளி பிரசாரம்...அதிமுகவின் சாதனைகளை கூறி வாக்கு சேகரிப்பு!

Tamil Selvi Selvakumar

தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சீர் கெட்டு உள்ளதாகவும், மாணவர்களிடையே போதை பழக்கம் அதிகரித்துள்ளதாகவும் எடப்பாடி பழனிச்சாமி குற்றம் சாட்டியுள்ளார். 

ஈரோடு இடைத்தேர்தல் இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் எடப்பாடி பழனிச்சாமி  தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். ஈரோடு அக்ரஹாரம் பகுதியில்  திறந்த வெளி வேனில் மக்கள் முன்பு  பேசிய அவர், அ.தி.மு.க. ஆட்சி கால சாதனைகளை விளக்கி வாக்கு சேகரித்தவர், அ.தி.மு.க. ஆட்சியில் 28 லட்சம் பேருக்கு பட்டா வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். 

22 மாத கால ஆட்சியில் ஈரோடு கிழக்குத் தொகுதிக்கு எந்த திட்டத்தையும் திமுக கொண்டுவரவில்லை என்று புகார் கூறிய எடப்பாடி பழனிசாமி,  தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சீர் கெட்டு உள்ளதாகவும், மாணவர்களிடையே போதை பழக்கம் அதிகரித்துள்ளதாகவும் குற்றம் சாட்டினார்.