தமிழ்நாடு

வடகிழக்கு பருவமழை - இன்று ஆலோசனை..!

Malaimurasu Seithigal TV

வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன்  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை.

ஆலோசனை கூட்டம்:

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து சென்னை கலைவாணர் அரங்கில் இன்று ஆலோசனைக் கூட்டம் நடைபெறவுள்ளது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில், வருவாய் மற்றும் பேரிடர் மீட்பு துறை, நகராட்சி நிர்வாகம், வேளாண்மை உள்ளிட்ட பல்வேறு துறை சார்ந்த அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் பங்கேற்க உள்ளனர். 

எதிர்பார்ப்பு:

இக்கூட்டத்தில், வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கு முன்பு மழைநீர் வடிகால் உள்ளிட்ட பணிகளை விரைந்து மேற்கொள்ள பல்வேறு அறிவுரைகளை முதலமைச்சர் வழங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

எதிர்வரும் வடகிழக்கு பருவமழைக் காலத்தில், பேரிடர்களின் சவால்களை  எதிர்கொள்ள அனைத்துத் துறை அலுவலர்களும் ஒருங்கிணைந்து செயல்பட பல்வேறு உத்தரவுகள் இந்த கூட்டத்தில் பிறப்பிக்கப்படும் என கூறப்படுகிறது.\

அடுத்தகட்ட நடவடிக்கை:

இந்த ஆலோசனைக் கூட்டத்தில் எடுக்கப்படும் முடிவுகளின் அடிப்படையில், தமிழக அரசின் சார்பில் அடுத்தக் கட்ட பணிகள் விரைவுப்படுத்தப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.