தமிழ்நாடு

வடகிழக்கு பருவமழை: ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் நியமனம்...!

Tamil Selvi Selvakumar

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை பாதிப்புகளை கண்காணிக்க 37 ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளதாக பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

தீவிரமடைந்த வடகிழக்கு பருவமழை:

தமிழகத்தில் தீவிரமடைந்துள்ள வடகிழக்கு பருவமழையால் சென்னையின்  பல்வேறு பகுதிகளில் மக்களின் இயல்பு வாழ்க்கையில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

ஆய்வு நடத்திய அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன்:

இதனால், மழை காலத்தில் பேரிடர் மேலாண்மை துறையின் மாநில அவசர கால செயல்பாட்டு மையத்தில் எடுக்கப்படும் நடவடிக்கைகள் குறித்து வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன் ஆய்வு செய்தார்.

ஐஏஎஸ் அதிகாரிகள் நியமிப்பு:

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தொடங்கி விட்டதாகவும், ஆனால், மழைக்கு முன்பாகவே முதலமைச்சர் அதிகாரிகளை அழைத்து தேவையான யுக்திகளை மேற்கொள்ள வேண்டும் என்று சொல்லி இருந்தார். அதன்படி, சென்னைக்கு 15 கண்காணிப்பு அதிகாரிகளும், தமிழகத்துக்கு 37 ஐஏஎஸ் அதிகாரிகள் கண்காணிப்பு அதிகாரிகளாக நியமிக்கப்பட்டு உள்ளனர்.

முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்:

தொடர்ந்து பேசிய அவர், கடந்த ஆட்சியில் இருந்த மழை பாதிப்புக்கும், தென்மேற்கு பருவ மழை காலத்தில் இருந்த பாதிப்பை விட இந்த வட கிழக்கு பருவ மழை நாட்களில் தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும், கடந்த காலங்களை போன்று பாதிப்பு இல்லாமல் தற்போது தேவையான அனைத்து நடவடிக்கையையும் எடுத்து வருவதாகவும் அவர் தெரிவித்தார்.