சேலம் புறப்பட சென்னை விமான நிலையம் வந்த அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி, செய்தியாளர்களை சந்தித்தார். தமிழத்தின் சட்ட ஒழுங்கு, காவிரி பிரச்சனை மற்றும் தமிழக வெற்றி கழகத்தின் நிர்வாகிகள் மீதான குற்றச்சாட்டுகள் குறித்து பேசியிருந்தார். “தமிழ்நாட்டில் பத்திரிகையாளர்களை சந்திக்காத ஒரே முதலமைச்சர் ஜோசப் விஜய் தான்” என்றும் “தவெகவின் 6 மாத கால ஆட்சியை எண்ணி மக்கள் எள்ளி நகையாடுகிறார்கள்” கடுமையாக விமர்சித்திருந்தார்.
காவல் நிலையத்திற்கு ஒரு அமைச்சர் சென்று எந்த அடிப்படையில் ஆய்வு செய்கிறார். தவெக அமைச்சர்களும் சட்டமன்ற உறுப்பினர்கள், தவெக நிர்வாகிகள் அடிக்கின்ற கூத்து வெட்கக்கேடானது.
நேற்று தேனி மாவட்டம் பேச்சிப்பாறை அணையில் இருந்து அதிகாரிகள் அனுமதி இல்லாமல் தவெகவினர் பாசனத்திற்காக தண்ணீர் திறந்து விட்டு உள்ளனர். இந்த விவகாரம் கண்டனத்திற்குரியது, அதிகாரிகள் மற்றும் அரசின் ஒப்புதலின் அடிப்படையில்தான் பாசனத்திற்கு தண்ணீர் திறப்பது வழக்கம். தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகளின் அடாவடித்தனம் எல்லை மீறி செல்கிறது. தவெகவின் 6 மாத கால ஆட்சியை எண்ணி மக்கள் எள்ளி நகையாடுகிறார்கள். எங்கு பார்த்தாலும் கொலை, கொள்ளை, தமிழகத்தில் பாலியல் தொடர்பான செய்திகள் வராத நாளே இல்லை என்ற அளவிற்கு மோசமான ஆட்சி நடைபெற்று வருகிறது.
காவிரி பிரச்சனை குறித்து முதலமைச்சர் விஜய் வாய் திறக்காதது ஏன்.. தமிழக முதலமைச்சர் என்ன செய்து கொண்டிருக்கிறார் என்றே தெரியவில்லை, பொதுவெளியில் வந்து மக்களைச் சந்தித்தார் தான் அவர்களின் பிரச்சினைகள் என்ன என்பது அவருக்கு தெரியவரும் என்றும் குறிப்பிட்டார்.
தமிழக மக்களின் பிரதான பிரச்சினையாக காவிரி நீர் விவகாரம் இருக்கும் நிலையில், இதுகுறித்து தமிழக முதலமைச்சர் உரிய முறையில் குரல் கொடுத்து எடுத்துரைத்திருக்க வேண்டும். ஆனால், அதைச் செய்யத் தவறிவிட்டார். சோனியாவின் புத்தக வெளியீட்டு விழாவில் கர்நாடக முதல்வருடன் காவிரி பற்றி முதல்வர் விஜய் பேசியிருக்க வேண்டும்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.