தமிழ்நாடு

தூத்துக்குடியில் அமையவுள்ள இஸ்ரோ ராக்கெட் ஏவுதளத்துக்கான எல்லைகள் அறிவிப்பு!!

Malaimurasu Seithigal TV

தூத்துக்குடி மாவட்டத்தில் இஸ்ரோ ராக்கெட் ஏவுதளத்துக்கான எல்லைகளை மத்திய அரசு அறிவித்துள்ளது. 

இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனத்தின் ராக்கெட் ஏவும் பணிகளுக்காக தூத்துக்குடி மாவட்டம் குலசேகரபட்டினம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. 

அங்கு இடம் தேர்வு விவரத்தை மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்து உள்ளது. குறிப்பிட்ட அந்த பகுதியை மக்கள் பயன்பாட்டுக்கு தடை விதித்து அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது. 

அதன்படி கிழக்கு கடற்கரை சாலையான தூத்துக்குடி- திருச்செந்தூர்- கன்னியாகுமரி சாலையை ஒட்டியுள்ள படுக்கபத்து மற்றும் சாத்தான்குளம் தாலுகாவில் பள்ளக்குறிச்சி, திருச்செந்தூர் தாலுகாவில் மாதவன்குறிச்சியை உள்ளடக்கிய பகுதி தேர்வு செய்யப்பட்டுள்ளதாக கூறப்பட்டு உள்ளது.