தமிழ்நாடு

இனி Fresh ஜூஸ் தான்.. மா, பலா விலை குறைய போகுதாம்.. ஏன் தெரியுமா?

சென்னை கோயம்பேடு பழ சந்தைக்கு மாம்பழம், பலாப்பழம் வரத்து அதிகரித்து வருவதால், விலைகளும் குறைவாக உள்ளதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

Suaif Arsath

சென்னை கோயம்பேடு பழ சந்தைக்கு ஆந்திரா, கர்நாடகா,கேரளா மற்றும் தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்களில் இருந்து பழங்களின் வரத்து அதகரித்துள்ளது.

இந்நிலையில், கோடைகாலம் தொடங்கியதால் கோயம்பேடு சந்தைக்கு மாம்பழம், பலாப்பழம் மற்றும் தர்பூசணி உள்ளிட்ட பழங்களின் வரத்து அதிகரிக்க தொடங்கி உள்ளது.

மேலும்  ஒரு கிலோ மாம்பழம் 80 ரூபாய்க்கும், பலாப்பழம் 30 மூதல் 50 ரூபாய்க்கும், தர்பூசணி பழம் 15 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுவதாக வியாபாரிகள் தெரிவித்தனர். இதில் ஆப்பிள், மாதுளை போன்ற பழங்களின் விலை மட்டும் சற்று அதிகரித்து உள்ளதாகவும், வரும் காலங்களில் அதன் விலையும் குறையும் என தெரிவித்துள்ளனர்.