seeman  
தமிழ்நாடு

ஆடு மாடுகள் முன்னிலையில் எழுச்சியுரை..! விசாயிகளின் ஓட்டை குறிவைக்கிறாரா சீமான்!!?

நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தொடர்ந்து இயற்கை விவசாயம், விவசாயம் சார்ந்த உப தொழில்கள், ஆடு, மாடுகள் வளர்ப்பு,...

Saleth stephi graph

நாம் தமிழர் கட்சியின் உழவர் பாசறை சார்பாக 'மேய்ச்சல் நிலம் எங்கள் உரிமை' என் முழக்கத்தை முன்வைத்து ஆடு மாடுகள் மாநாடு மதுரை அருகே உள்ள விராதனூர் கிராமத்தில் நேற்று மலை நடைபெற்றது.

கிட்டத்தட்ட ஆயிரக்கணக்கான மாடுகள் இருக்கும் இடத்தில் சுற்றி இரும்பு வேலிகள் அமைத்து, அதற்கு முன்பாக ஒரு மேடை அமைத்து மேடையிலிருந்து மாடுகளுக்கு முன்பாக நேற்று எழுச்சியரையாற்றினார்.

நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தொடர்ந்து இயற்கை விவசாயம், விவசாயம் சார்ந்த உப தொழில்கள், ஆடு, மாடுகள் வளர்ப்பு, கோழிகள் வளர்ப்பு, பனை- தென்னை கள் எடுப்பது, தற்சார்பு வாழ்வியல் முறை ஆகியவை குறித்து தன்னுடைய பேச்சில் அடிக்கடி குறிப்பிடுவது வழக்கம். அண்மையில் கூட திருச்செந்தூர் அருகே பனைமரம் ஏறி கள் இறக்கியதோடு அதனைக் குடித்தும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தினார்.

இதன் தொடர்ச்சியாக, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் ஆடு மாடுகளை மேய்ப்பதற்கு வனத்துறை பல கட்டுப்பாடுகளை விதிப்பதுடன் சில பகுதிகளில் மேய்ச்சலுக்கு விலங்குகளை அனுமதிக்காத நிலையும் உள்ளது. இதனால் ஆடுமாடுகள் உணவுகளுக்கு பாதிக்கப்படுவதாக அப்பகுதி விவசாயிகள் குற்றம் சாட்டி வருகின்றனர். மேலும் கால்நடைகளின் உரிமையாளர்களும் வளர்ப்பதற்கு மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். எனவே மேய்ச்சல் நிலங்களை மீட்க வேண்டும், ஆடு மாடுகள் வனப்பகுதிகளில் அனுமதிக்க வேண்டும். என்பதை, வலியுறுத்தும் வகையகல் மேச்சல் நிலம் எங்கள் உரிமை என்ற முழக்கத்தை முன்வைத்து ஆடு மாடு களுக்கான மாநாட்டை சீமான்நேற்று நடத்தினர்.

இதற்காக ஆடு மாடுகளிடம் குறைகளை கேட்டு அறிந்து அதனை தமிழக அரசிடம் கொண்டு செல்வதற்காக இந்த மாநாட்டினை நடத்தினர். 

தமிழக அரசியல் வரலாற்றில் முதல் முறையாக ஆடு மாடுகளுக்கு என்று தனியே ஒரு மாநாட்டை நாம் தமிழர் கட்சி நடத்தியது.  இந்த மாநாட்டு ஏற்பாட்டு பணிகளின் போது பலமுறை சீமான் நேரடியாக வருகை தந்து மாநாட்டுத் திடலை ஆய்வு செய்தார். அதற்கு குறிப்பாக ஸ்பீக்கர் சத்தத்தில் ஆடு மாடுகள் மிரளுகின்றனவா என தானே பேசி அதனை ஆய்வு செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த மாநாட்டில் சில தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது..!

மாநாட்டு தீர்மானங்கள்:-

1.வன உரிமை அங்கீகாரச்சட்டம் 2006 மேய்ச்சல் சமூக மக்களுக்கு வழங்கியுள்ள வன மேய்ச்சல் உரிமையை வழங்க வேண்டும்!

2. தமிழகம் முழுவதும் உள்ள மேய்ச்சல் தரிசு, மந்தை புறம்போக்கு நிலங்களை மீட்டெடுக்க வேண்டும்.

3.கிடை ஆடு, மாடுகளின் பாரம்பரிய வலசைப் பாதைகளை ஆவணப்படுத்தி அங்கீகரிக்க வேண்டும்.

4. தமிழ்நாடு முழுவதும் மேய்ச்சல் முறையில் வளர்க்கப்படும் கிடை ஆடு, கிடை மாடு, எருமை, வாத்து மேய்ப்போருக்காகத் தனியாக, தமிழ்நாடு மேய்ச்சல் பொருளாதார மேம்பாட்டு வாரியம் (Tamilnadu Pastoral Economic Development Board) அமைத்திட வேண்டும்.

5. நாட்டின ஆடு, மாடுகளை பாதுகாக்க அதனை வளர்க்கும் மக்களுக்குத் தனியாகச் சிறப்புத் திட்டங்களை ஏற்படுத்த வேண்டும்.

6. கால்நடைகளுடன் இடம் விட்டு இடம் பெயரும் மக்களின் உரிமைக்கும் உடைமைப் பாதுகாப்பிற்கும் வலசைச் செல்வோர் பாதுகாப்புச் சட்டம் இயற்ற வேண்டும்.

7. இடி, மின்னல், புயல், வெள்ளம் உள்ளிட்ட இயற்கைப் பேரிடர்களில் பாதிக்கப்படும் மேய்ச்சல் சமூக மக்கள மற்றும் அவர்களின் கால்நடைகளுக்குத் தனியாகக் காப்பீட்டுத் திட்டங்களை ஏற்படுத்த வேண்டும்!

8. சிப்காட் போன்ற திட்டங்களுக்கு மேய்ச்சல் நிலங்களைக் கையகப்படுத்துவதைத் தடை செய்ய வேண்டும்.

9. தமிழ்நாடு வனத்தோட்டக் கழகத்திற்குக் குத்தகைக்கு விடப்பட்டு இயற்கையான மேய்ச்சல் காடுகள் அழிக்கப்பட்டு 75,000 ஹெக்டேருக்கு அதிகமான வன நிலங்கள் தைல மரம் உள்ளிட்ட வணிக மரங்கள் நடப்பட்டதை மாற்றி மீண்டும் இயற்கை காடுகளை உருவாக்க வேண்டும்.

10. கிடாய் முட்டு, சேவல் சண்டை மஞ்சுவிரட்டு போன்ற கால்நடை சார்ந்த பாரம்பரிய விளையாட்டுகளை தடையின்றி நடத்த அனுமதிக்க வேண்டும்.

11. கால்நடை துறை மருந்தகங்களில் தமிழ் கால்நடை மருத்துவம் மற்றும் மருந்துகளை பயன்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்

12. தமிழ்நாட்டில் அழிந்துவரும் எருமை வளர்ப்பை மீட்டெடுக்க எருமை பாலுக்கு சிறப்பு கொள்முதல் விலை நிர்ணயம் செய்ய வேண்டும்.

13. மேய்ச்சல் வலசை வழித்தடங்களில் உள்ள நெடுஞ்சாலை, தொடர்வண்டி பாதைகளில் மேய்ச்சலுக்காக சுரங்க பாதைகளை உருவாக்கிட வேண்டும்

14. மேய்ச்சல் சமூக மக்களுக்கு அரசு தனியாக அடையாள அட்டை வழங்கி அவர்களுக்கு இலவச காப்பீட்டு திட்டத்தை உருவாக்க வேண்டும்.

15. கால்நடைதுறையில் மேய்ச்சல் கால்நடைகளுக்கு என தனிப்பிரிவு உருவாக்க வேண்டும்.

இந்நிலையில் தனியார் யுடியூப் சேனலுக்கு பேட்டியளித்த ரவீந்திரன் துரை சாமி பேசுகையில்,  “இந்த செயல்பாடுகள் உண்மையில் தாக்கத்தை ஏற்படுத்தும். கள் இறக்கும் போராட்டமோ, அள்ளாது இந்த ஆடுமாடுகள் முன்னிலையான உரையோ நிச்சயம் கவனத்தை ஏற்படுத்துகிறது. இவை எல்லாம் அனைத்து தரப்பு விவசாயிகளின் ஓட்டுக்களை குறிவைக்கும் செயல் அதில் அவர் வெற்றியும் பெற வாய்ப்புண்டு” என பேசியுள்ளார்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.