Nungambakkam theft news 
தமிழ்நாடு

உரிமையாளருக்கு விபூதி அடித்த ஒரே குடும்பத்தினர் - கூட்டு களவாணிகளை தேடும் போலீஸ்..

நுங்கம்பாக்கத்தில் வீட்டின் பூட்டை உடைத்து 2 கோடி மதிப்பிலான தங்க வைர நகைகள் காணாமல் போன விவகாரத்தில் வீட்டில் பணி புரிந்து வந்த ஓட்டுனர் கைது..

Anbarasan

புத்தாண்டை கொண்டாட சொந்த ஊருக்கு சென்று விட்டு வீடு திரும்பிய போது பூட்டு உடைக்கப்பட்டு கபோர்ட்டில் வைத்திருந்த தங்க வைர நகைகள் கொள்ளை போனதாக கடந்த ஜனவரி 3ஆம் தேதி நுங்கம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார். புகாரின் பேரில் தனிப்படை போலீசார் கார் ஓட்டுனர் சந்தரபரியார் என்பவரை கைது செய்து விசாரணையில் ஓட்டுனரின் உறவினர்கள் திட்டமிட்டு கொள்ளை சம்பவத்தை அரங்கேற்றியது தெரியவந்தது. இதனை அடுத்து கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட வீட்டின் பணி பெண்ணாக பணிபுரிந்து வந்த சாந்தா ,தீபக் ,கோரக் சாய் ,பவித்ரா ,மற்றும் ஷாலினி ஆகிய ஐந்து பேரை போலீசார் தேடி வருகின்றனர்...