அதிமுக ஒற்றைத் தலைமை விவகாரத்தில் ஈபிஎஸ் – ஓபிஎஸ் இடையே கருத்து வேற்றுமை ஏற்பட்ட நிலையில் இருவரும் தனித்தனியாக தங்கள் ஆதரவாளர்களுடன் ஆலோசனை மேற்கொண்டு வந்தனர்.
இந்த விவகாரத்திற்கு நடுவே ஓபிஎஸ் ஆதரவாளர்கள் தொடர்ந்து தங்கள் ஆதரவை எடப்பாடி பழனிசாமி பக்கம் திருப்பி வருவது அதிமுகவில் மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் சென்னை பசுமை வழிச்சாலையில் உள்ள எடப்பாடி பழனிசாமி இல்லத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த ஜெயக்குமார், ஒ.பி.எஸ். கடிதம் எழுதுவதை தொண்டர்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்றும், எடப்பாடிக்கு எழுதிய கடிதத்தை ஊடகங்களில் வெளியிட்டிருக்கக் கூடாது என்றும், விமர்சித்துள்ளார்.