தமிழ்நாடு

எடப்பாடியை அருமை அண்ணன் என கூறிய ஓபிஎஸ்… ‘சேர தயார் சேர்த்துக் கொள்ள தயாரா?’ என கேள்வி!

மனோஜ் பாண்டியன் உள்ளிட்டோர் திமுகவில் இணைந்த நிலையில் குன்னம் ராமச்சந்திரன் அரசியலை விட்டு விலகி உள்ளார்...

Mahalakshmi Somasundaram

தமிழக அரசியல் காலம் தற்போது சூடுபிடித்துள்ள நிலையில் பலமான கூட்டணி என்று சொல்லப்பட்ட காங்கிரஸ் மற்றும் திமுக இடையிலான கூட்டணியில் சலசலப்பு ஏற்பட்டுள்ளது. ஆனால் பொருத்தமில்லை கூட்டணி என விமர்சிக்கப்பட்டு வந்த பாஜக மற்றும் அதிமுக இடையிலான கூட்டணி தொடர்ந்து பலம் அடைந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் எதிரும் புதிருமாக இருந்த எடப்பாடி பழனிச்சாமியும் அமமுக கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரனும் கூட்டணி அமைத்துள்ள நிலையில் ஓ. பொன்னேர் செல்வமும் அதிமுகவில் இணைவாரா? என்ற கேள்வி எழுந்திருந்தது.

அதற்கு ஏற்றார் போல பன்னீர்செல்வமும் கடந்த சில சந்திப்புகளின் போது செய்தியாளர்கள் கேள்விக்கு “உரிய நேரத்தில் எல்லாவற்றிற்கும் பதில் அளிப்பேன்” என கூறி வந்தார். ஆனால் எடப்பாடி பழனிசாமி டெல்லியில் சென்று அமித்ஷாவை சந்தித்த போது செய்தியாளர் சந்திப்பில் பேசியிருந்தார். அதில் “பன்னீர் செல்வத்துடன் கூட்டணியா? என்ற கேள்விக்கு பலமுறை பதிலளித்து விட்டேன் அது ஒரு முடிந்து போன கதை” என கூறி பன்னீர் செல்வத்துடன் கூட்டணி இல்லை என்பதை தெரிவித்து இருந்தார். பன்னீர் செல்வத்தின் ஆதரவாளராக இருந்த வைத்தியலிங்கம், மனோஜ் பாண்டியன் உள்ளிட்டோர் திமுகவில் இணைந்த நிலையில் குன்னம் ராமச்சந்திரன் அரசியலை விட்டு விலகி உள்ளார்.

இவ்வாறு பன்னீர் செல்வத்தின் ஆதரவாளர்கள் குறைந்து வருவதும் தற்போது வரை கூட்டணி குறித்து பன்னீர் செல்வம் தெரிவிக்காமல் இருப்பதும் அவருக்கு பலவீனமாக அமையும் என அரசியல் விமர்சகர்கள் விமர்சித்து வந்தனர். இந்நிலையில் கூட்டணி குறித்து நிலைப்பாட்டை இன்று தெரிவிப்பதாக கூறியிருந்த பன்னீர் செல்வம் இன்று தனது ஆதரவாளர்களுடன் தேனி மாவட்டம் பெரியகுளத்தில் ஆலோசனையில் ஈடுபட்டார். இந்த ஆலோசனை கூட்டத்தில் நிர்வாகிகள் இடையே சலசலப்பு ஏற்பட்டதாக தகவல்கள் வெளியானதை தொடர்ந்து ஆலோசனை கூட்டத்தை முடித்து செய்தியாளர்களை சந்தித்த பன்னீர்செல்வம் கூட்டணி குறித்த தனது நிலைப்பாட்டை தெரிவித்துள்ளார்.

“அதிமுக இயக்கத்தையும் அதன் தொண்டர்களையும் மீட்க சட்டப்போராட்டம் நடத்தி வருகிறோம். பிரிந்திருப்பவர்கள் ஒன்று சேர வேண்டும் என்பதே எங்கள் நோக்கம் தனிக்கட்சி தொடங்குவது குறித்து எந்த முடிவும் எடுக்கவில்லை. கடந்த தேர்தலில் தனியாக பலாப்பழம் சின்னத்தில் போட்டியிட்டது என் பக்கம் எங்கள் பக்கம் எவ்வளவு தொண்டர்கள் இருக்கிறார்கள் என்பதை காட்ட தான் அதற்கும் கூட எதிரிகள் எவ்வளவு சதி செய்தார்கள் என்பது உங்களுக்கு தெரியும். எதிரும் புதிருமாக இருந்த அருமை அண்ணன் எடப்பாடி பழனிசாமியும் தம்பி டிடிவியும் ஒன்றிணைத்துள்ளனர். நான் அதிமுக கூட்டணியில் இணைய தாரக உள்ளேன் சேர்த்துக்கொள்ள அவர்கள் தயாரா?” என பேசினார்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.