தமிழ்நாடு

தனியார் ஆம்னி பேருந்துகளின் கட்டணம் 30 சதவீதம் உயர்வு!!

Malaimurasu Seithigal TV

வார விடுமுறை மற்றும் சுதந்திர தின தொடர் விடுமுறையின் காரணமாக தனியார் ஆம்னி பேருந்துகளின் கட்டணம் 30 சதவீதம் உயர்ந்துள்ளது பொதுமக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

சனிக்கிழமை முதல் நான்கு நாட்கள் விடுமுறை காரணமாக மக்கள் அதிகமாக சொந்த ஊர்களுக்கு செல்ல திட்டமிட்டு பேருந்து வசதியை நாடி வருகின்றனர். இதனால் ஆம்னி பேருந்துகளிலும் கட்டணம் 30 சதவீதம் உயர்ந்துள்ளது.அதிலும் குறிப்பாக தென் மாவட்டங்களுக்கு செல்லும் பேருந்துகளின் கட்டணம் வெகுவாக உயர்ந்துள்ளது. 

அதன்படி  கன்னியாகுமரி ஏசி பேருந்து 2ஆயிரம் முதல் சாதாரண பேருந்து ஆயிரத்து 400 வரை உயர்ந்துள்ளது. அதேபோல்  நெல்லை ஏசி பேருந்து - 2 ஆயிரத்து 450 ரூபாய் மற்றும், சாதாரண பேருந்து 1400 ரூபாயும், தேனி ஏசி - ஆயிரத்து 650 ரூபாய் மற்றும் சாதாரண பேருந்து 950 ரூபாயும் உயர்ந்துள்ளது. 

மதுரை ஏசி பேருந்து - ஆயிரத்து 900 ரூபாயும்,  சாதாரண பேருந்து 900 ரூபாயும் உயர்ந்துள்ளது. அதேபோல் சேலம் ஏசி  பேருந்து ஆயிரத்து 400 ரூபாய் மற்றும் சாதாரண பேருந்து 900 ருபாயும் அதிகரித்துள்ளது. இந்த கட்டணங்கள் ஆன்லைன் முன்பதிவிலும் நேரடியாகவும் பேருந்து டிக்கெட்டுகளைப் பதிவு செய்பவர்களிடம் பெறப்படுகிறது. இதனை தொடர்ந்து கூடுதலாக சிறப்பு பேருந்துகள் இயக்க அரசு திட்டமிட்டுள்ளது.