தமிழ்நாடு

ஒணம் பண்டிகை; முதலமைச்சர் வாழ்த்து!

Malaimurasu Seithigal TV

நாடு முழுவதும் ஓணம் பண்டிகை இன்று கொண்டாடப்பட்டு வரும் நிலையில் முதலமைச்சா் மு.க.ஸ்டாலின், ஆளுநா் ஆா்.என்.ரவி உள்ளிட்டோா் வாழ்த்து தொிவித்துள்ளனா்.

நாடு முழுவதும் இன்று ஓணம் பண்டிகை வெகுவிமா்சையாக கொண்டாடப்படவுள்ளது. அதனையொட்டி முதலமைச்சா் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தொிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள அறிக்கையில், சமத்துவமும், வளர்ச்சியும், ஒற்றுமையும் நிறைந்த இந்தியாவை மீட்டெடுக்க நாம் அனைவரும் உறுதியேற்கிற நாளாக இந்த ஓணத் திருநாள் அமையட்டும் என குறிப்பிட்டுள்ளாா். மேலும் திராவிடப் பண்பாட்டுடன் பிரிக்க முடியாது. இரண்டறக் கலந்துள்ள ஓணத்தையும் விட்டுவைக்காமல், ஒரு தரப்பினர் வாமன் ஜெயந்தி என அதன் அடையாளத்தைப் பறிக்க முயல்கிறார்கள். கேரள மக்களே இத்தகைய குயுக்தி முயற்சிகளைப் புறக்கணிப்பார்கள் எனவும் தொிவித்துள்ளாா்.

தமிழ்நாடு ஆளுநா் ஆா்.என்.ரவி அவரது ட்விட்டா் பதிவில், ஓணம் திருநாளில், நாட்டின் அனைத்து குடிமக்களுக்கும் அன்பான நல்வாழ்த்துக்களை தொிவித்துள்ள ஆளுநா், மகாபலி நமக்கு அமைதி, வளம், நல்ல ஆரோக்கியத்தை வழங்க நாம் மகிழ்ச்சியான குடும்பமாக வாழ அருள்புரியட்டும் எனவும் குறிப்பிட்டுள்ளாா். 

இதேபோல் பல்வேறு அரசியல் கட்சி தலைவா்கள், நடிகா்கள் உள்ளிட்ட பலா் ஓணம் பண்டிகை வாழ்த்துக்களை தொிவித்து வருகின்றனா்.