திருவெறும்பூர் அருகே உள்ள மேல கல்கண்டார் கோட்டை மூப்பனார் நகரை சேர்ந்தவர் 42 வயதான அலெக்ஸ். இவருக்கு விக்டோரியா என்ற மனைவியும் ஆலியா ஆராதனா என இரண்டு பிள்ளைகள் இருக்கும் நிலையில், விக்டோரியா ரயில்வே துறையில் பணிபுரிந்து வருகிறார். அலெக்ஸ் ஜவுளி வியாபாரம் செய்து வந்திருக்கிறார்.
அலெக்ஸின் அம்மாவுக்கு கேன்சர் நோய் இருந்ததால் அம்மாவிற்கு மருத்துவம் பார்த்து வந்துள்ளார். தாயாரின் மருத்துவ செலவிற்கு ரூபாய் 3 லட்சம் செலவாகியுள்ளது. அதுமட்டுமல்லாமல் தனது தம்பி தொழில் தொடங்குவதற்காக தெரிந்த இடங்களில் இருந்து அலெக்ஸ் கடன் வாங்கி கொடுத்துள்ளார்.
மேலும் கல்கண்டார் பகுதியில் மகாலட்சுமி நகரில் அலெக்ஸ் கடன் வாங்கி ஒரு வீட்டை வாங்கிய நிலையில், அதற்கு தனது மனைவியான விக்டோரியாவின் தாய்க்கு வரும் ஓய்வூதிய பணத்தை தவணையாக செலுத்தி வந்துள்ளார்.
இந்நிலையில் அலெக்ஸின் ஜவுளி வியாபாரத்தில் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. சமீபத்தில் விக்டோரியாவின் தாய் இறந்துவிட்டதால் அவரது பணமும் வராமல் போன நிலையில், கடன்களை கட்ட முடியாமல் அலெக்ஸ் மன உளைச்சலுக்கு உள்ளாகியுள்ளார்.
இதனால் மனமுடைந்த அலெக்ஸ் மற்றும் விக்டோரியா நேற்று இரவு விஷம் கொடுத்து குழந்தைகளை கொன்றுவிட்டு தாங்களும் தற்கொலை செய்துகொண்டுள்ளார். இன்று காலை வெகுநேரமாகியும் வீடு திறக்காமல் இருந்ததால் சந்தேகமடைந்த அக்கம் பக்கத்தினர்.வீட்டின் கதவை உடைத்து பார்த்தபோது அலெக்ஸ் மற்றும் விக்டோரியா தூக்கில் தொங்கிய நிலையில் இருந்துள்ளனர்.
வீட்டின் பெட்ரூமில் குழந்தைகள் இருவரும் வாயில் நுரை தள்ளிய நிலையில் இறந்து கிடந்துள்ளனர். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர். உடனடியாக இதுகுறித்து போலீசில் தகவல் தெரிவித்துள்ளனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் நான்கு பேரின் உடலையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
ஒரே குடும்பத்தை சேர்ந்த குழந்தைகள் உட்பட நான்கு பேர் பலியானது அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தற்கொலை என்பது எந்த ஒரு பிரச்சனைக்கும் தீர்வாகாது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்