தமிழ்நாடு

முயலை குறி பார்த்து துப்பாக்கிச்சூடு நடத்திய மர்மநபர்கள்... மாறுதலாக பெண் மீது சுட்டு படுகாயம்!

கடலூர் மாவட்டம் விருதாச்சலத்தில் துப்பாக்கிச்சூட்டில் பெண் ஒருவர் படுகாயமடைந்த நிகழ்வு அரங்கேறியுள்ளது. 

Tamil Selvi Selvakumar

வலசை கிராமத்தில் முயலை பிடிப்பதற்காக சில மர்மநபர்கள் நாட்டுத் துப்பாக்கியைக் கொண்டு வேட்டையில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

அப்போது சாந்தகுமாரி என்பவரின் தொடைப்பகுதியில் தவறுதலாக துப்பாக்கிக் குண்டு பாய்ந்ததாகவும் தெரிகிறது. இதில் பலத்த காயமடைந்த சாந்தகுமாரி மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட நிலையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தகவலறிந்து சென்ற போலீசார் துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பியோடிவர்கள் குறித்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.