தமிழ்நாடு

கல்யாணம்.. கசமுசா.. மோசடி.. ரிப்பீட்டு! 5 கணவர்களை ஏமாற்றி 6வது கணவருடன் ஓட்டம் - பெற்ற தாய் மூலம் வெளிவந்த உண்மை!

உனக்கு முன்பாகவே அவளுக்கு நான்கு திருமணங்கள் ஆகிவிட்டது, அதை மறைத்து தான் உன்னை திருமணம் செய்து இருக்கிறார்கள்...

Mahalakshmi Somasundaram

கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் அருகே உள்ள மூரார்பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் சிவகுமார். இவருக்கு காளீஸ்வரி என்ற பெண்ணுடன் டிக் டாக் செயலி மூலம் பழக்கம் ஏற்பட்டு காளீஸ்வரி தாயை இழந்து சித்தியிடம் கொடுமையை அனுபவிப்பதை அறிந்து அவர் மீது காதல் ஏற்பட்டுள்ளது. பின்னர் இருவருக்கும் கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு ஒரு ஆண் மற்றும் ஒரு பெண் குழந்தை உள்ள நிலையில் குடும்பத்துடன் மூரார்பாளையத்தில் வசித்து வந்தனர். இந்த நிலையில் சிவகுமார் மனைவி காளீஸ்வரி தனது குழந்தைகளை ஆந்திராவில் உள்ள தன் கணவனின் பாட்டி வீட்டிற்கு அழைத்துச் செல்வதாக கூறி சென்றவர் ஆந்திராவில் குழந்தைகளை விட்டுவிட்டு காணாமல் போனதாக சொல்லப்படுகிறது.

இதை அறிந்த சிவக்குமார் சங்கராபுரம் காவல் நிலையத்தில் தனது மனைவியை காணவில்லை என புகார் அளித்திருந்தார். இந்த புகார் ஏற்று காவலர்கள் காளீஸ்வரியை அழைத்து விசாரித்த போது “நான் சொந்த விருப்பத்துடன் தான் சென்று உள்ளேன். நான் காணாமல் போகவில்லை” என ஸ்டேட்மெண்ட் கொடுத்துவிட்டு சென்றுள்ளார். இதை அறிந்த சிவகுமார் “என் மனைவி வந்ததை ஏன் எனக்கு தகவல் தெரிவிக்கவில்லை புகார் கொடுத்தது நான் என்னிடம் தகவல் தெரிவிக்காமல் அவரை திருப்பி அனுப்பி விட்டீர்களே” என்று கேட்டதற்கு காவல்துறையினர் சரியான பதில் அளிக்கவில்லை என கூறப்படுகிறது.

அதன் பின்பு மதுரையில் உள்ள காளீஸ்வரியின் தாய் மகாலட்சுமியிடம் சென்று சிவகுமார் “நீங்கள் காளீஸ்வரிக்கு தாயா இல்லை சித்தியா?” என கேட்டுள்ளார். அதற்கு கண் கலங்கிய காளீஸ்வரியின் தாய் மகாலட்சுமி “உனக்கு முன்பாகவே அவளுக்கு நான்கு திருமணங்கள் ஆகிவிட்டது, அதை மறைத்து தான் உன்னை திருமணம் செய்து இருக்கிறார்கள். முதலாவதாக சென்னை சேர்ந்த வெங்கடேசன், இரண்டாவதாக கோயம்புத்தூரைச் சேர்ந்த சுரேஷ்குமார், மூன்றாவதாக ஜெயராஜ், நான்காவதாக லிங்குசாமி, பிறகு ஐந்தாவதாக உன்னை திருமணம் செய்திருக்கிறாள்” என கூறி அதற்கான ஆவணங்களையும் சிவகுமாரிடம் ஒப்படைத்திருக்கிறார்.

தற்போது சிவகுமாரை பிரிந்து சென்று காளீஸ்வரி ஆம்பூரை சேர்ந்த மணிகண்டன் என்பவரை திருமணம் செய்து வாழ்த்துவருகிறார். இதனால் அதிர்ச்சியடைந்த சிவகுமார், இதுவரை ஐந்து நபர்களை திருமணம் செய்து ஏமாற்றிய காளீஸ்வரியை கைது செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், தனக்கு சொந்தமான 3 சவரன் நகை மற்றும் 3 லட்சம் பணத்தை அவரிடம் இருந்து மீட்டு தரவேண்டும் என்றும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளார். மேலும் இது குறித்து கள்ளக்குறிச்சி காவல்துறையினரிடம் புகாரளித்தும் இதுவரை எந்த வித நடவடிக்கையும் எடுக்காமல் இருப்பதாக தெரிவித்திருக்கிறார்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.