தமிழ்நாடு

அண்ணாமலை தமிழகத்தில் செய்த மிகப்பெரிய பணி ..... அதிமுகவை பிரித்தது தான்....!

Malaimurasu Seithigal TV

ராகுல் காந்தி மீது பல வழக்குகள் போட்டாலும் அதனை எதிர்கொள்ள காங்கிரஸ் கட்சி தயாராக உள்ளதாக நாங்குநேரி சட்டமன்ற உறுப்பினர் ரூபி மனோகரன் கூறியுள்ளார்...

ராகுல் காந்திக்கு சிறை தண்டனை வழங்கப்பட்டதையும் பதவி பறிப்பையும் கண்டித்து சென்னை கிழக்கு தாம்பரத்தில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் தெருமுனை கூட்டம் நடைபெற்றது.

இந்த கூட்டத்திற்கு சிறப்புரையாற்ற வருகை தந்திருந்த  நாங்குநேரி சட்டமன்ற உறுப்பினர் ரூபி மனோகரன் செய்தியாளர்களை சந்தித்தபோது....

ராகுல் காந்தி மீது இன்னும் பல வழக்குகள் போட்டாலும் அவற்றை  காங்கிரஸ் கட்சி எதிர்கொள்ளத்  தயாராக இருப்பதாகவும் இதனால் காங்கிரஸ் கட்சி வீரியம் பெற்று வருவதாகவும் கூறினார். 

மேலும் பாஜக தலைவர் அண்ணாமலை நாளைய தினம் பொய் மூட்டைகளையே வெளியிட இருப்பதாகவும் அண்ணாமலை பொருத்தவரை தமிழகத்தில் செய்த மிகப்பெரிய பணி என்பது அதிமுகவை பிரித்தது தான் எனவும் தெரிவித்தார். மேலும் பிரித்தாலும் சூழ்ச்சியில் பாஜகவினர் கைதேர்ந்தவர்கள் எனவும் குற்றம் சாட்டினார்.