தமிழ்நாடு

தொடர் விடுமுறை...தமிழ் புத்தாண்டை முன்னிட்டு சிறப்பு பேருந்துகள் இயக்கம்...!

Tamil Selvi Selvakumar

தமிழ் புத்தாண்டை முன்னிட்டு கோவையில் இருந்து பிற நகரங்களுக்கு 150 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுவதாக அரசு போக்குவரத்து கழகம் தெரிவித்துள்ளது.

தமிழ் புத்தாண்டு வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட உள்ள நிலையிலும், தொடர் விடுமுறையை முன்னிட்டும் சொந்த ஊர்களுக்கு செல்லும் பொதுமக்களுக்கு ஏதுவாக சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுவதாக அரசு போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது.

அதன்படி, சிங்காநல்லூர் பேருந்து நிலையத்தில் இருந்து மதுரை , தேனி, ராஜபாளையம், தூத்துக்குடி உள்ளிட்ட தென் மாவட்டங்களுக்கு 110 சிறப்பு பேருந்துகளும், காந்திபுரத்திலிருந்து சேலம் ,ஈரோடு மார்க்கமாக பிற ஊர்களுக்கு செல்ல 40 சிறப்பு பேருந்துகளும் இயக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.