அவிநாசி சட்டமன்ற தொகுதி  
தமிழ்நாடு

அவிநாசியில் அதிமுகவின் அசுர வேகம்! திமுகவின் வியூகம் பலிக்குமா? மாலை முரசு - கான்சிலிடிக்ஸ் வெளியிட்ட அதிரடித் தகவல்!

அதே சமயம் அதிமுக 49.8% ஆகச் சற்று சரிவைச் சந்தித்தாலும், இன்னும் முன்னிலையிலேயே உள்ளது.

மாலை முரசு செய்தி குழு

"மாலை முரசு - கான்சிலிடிக்ஸ்" இணைந்து தமிழகம் முழுவதும் நடத்திய மாபெரும் கருத்துக்கணிப்பு முடிவுகள் குறித்து "Tamil Nadu Political League" நிகழ்ச்சியில் அவிநாசி தொகுதி பற்றியும், வரும் 2026 சட்டமன்ற தேர்தலில் அங்கு வெற்றிப் பெற அதிகம் வாய்ப்புள்ள கூட்டணி எது? என்பது குறித்த முழுமையான தகவல்கள் இங்கே தொகுக்கப்பட்டுள்ளன. திருப்பூர் மாவட்டத்தின் மிக முக்கியமான தனித் தொகுதியான அவிநாசி, எப்போதும் அதிமுகவின் கோட்டையாகவே பார்க்கப்படுகிறது.

வாக்காளர் அடையாளங்கள் மற்றும் சமூகக் கட்டமைப்பு:

அவிநாசி தொகுதியில் 18 முதல் 25 வயதுடைய இளம் வாக்காளர்கள் 12.15% ஆக உள்ளனர். 52.13% பெண் வாக்காளர்களுடன் பெண்களின் ஆதிக்கம் இங்கு அதிகம். சமூக ரீதியாகப் பார்த்தால், அவிநாசி ஒரு அருந்ததியர் சமூகம் அதிகம் வாழும் பகுதியாகும். இங்கு வெள்ளாள கவுண்டர்கள் 32%, அருந்ததியர்கள் 22%, ஒக்கலிக கவுண்டர்கள் 15%, நாடார்கள் 8% மற்றும் செட்டியார்கள் 5% என உள்ளனர். இந்தச் சமூகங்களின் வாக்கு வங்கித் தீர்மானிக்கும் சக்தியாக உள்ளது.

அவிநாசி தொகுதி பற்றிய முழு கருத்து கணிப்பை காணொளியாக காண : இங்கே கிளிக் செய்யவும்

உள்ளூர் பிரச்சனைகள்:

இங்குள்ள அவிநாசி லிங்கேஸ்வரர் கோவிலைச் சுற்றியுள்ள நில ஆக்கிரமிப்புகள் நீண்ட காலப் பிரச்சனையாக உள்ளது. விசைத்தறித் தொழிலாளர்களுக்கு மானிய விலையில் மின்சாரம் மற்றும் கூலி உயர்வு தொடர்பான சிக்கல்கள் இப்போதும் தீர்க்கப்படாமல் உள்ளன. விவசாயிகளைப் பொறுத்தவரை பயிர்க் காப்பீடு மற்றும் இழப்பீடு பெறுவதில் உள்ள நடைமுறைச் சிக்கல்களைப் பிரதானமாக முன்வைக்கின்றனர். மேலும், நகர்ப்புற பகுதிகளில் கொசுத் தொல்லை ஒரு முக்கிய சிவிக் இஸ்யூவாக உள்ளது.

தேர்தல் வரலாறு (2021 vs 2024):

2021 சட்டமன்றத் தேர்தலில் அதிமுக வேட்பாளர் தனபால் அவர்கள் 55.82% வாக்குகளைப் பெற்றுப் பிரம்மாண்ட வெற்றி பெற்றார். திமுக அப்போது 31.62% வாக்குகளை மட்டுமே பெற்றது. ஆனால், 2024 நாடாளுமன்றத் தேர்தலில் திமுக தனது நிலையை 41.33% ஆக உயர்த்தியுள்ளது. அதே சமயம் அதிமுக 49.8% ஆகச் சற்று சரிவைச் சந்தித்தாலும், இன்னும் முன்னிலையிலேயே உள்ளது. நாம் தமிழர் கட்சி 6% வாக்குகளைத் தொடர்ந்து தக்கவைத்துள்ளது.

2026 தேர்தல் கணிப்பு மற்றும் பூத் நிலவரம்:

வாக்குச் சாவடி வாரியாகப் பார்த்தால், 2021-ல் அதிமுக 120 பூத்களில் வலுவாக இருந்தது, 2024-ல் அது 112 ஆகக் குறைந்துள்ளது. திமுக 98 பூத்களிலிருந்து 123 ஆகத் தனது பலத்தை உயர்த்தியுள்ளது. இருப்பினும், 2026-க்கான கணிப்பில் அதிமுக 120 பூத்களில் மீண்டும் வலுவடைய வாய்ப்புள்ளது. இங்கு ஸ்விங் பூத்கள் மிகக் குறைவாகவே (30 பூத்கள்) உள்ளன.

கான்சிலிடிக்ஸ் குழுவின் 2026 முன்கூட்டிய கணிப்பின்படி, அதிமுக 44% வாக்குகளைப் பெற்று அமோக வெற்றி பெற வாய்ப்புள்ளது. திமுக 30% வாக்குகளையும், நாம் தமிழர் மற்றும் தமிழக வெற்றிக் கழகம் இணைந்து 24% வாக்குகளையும் பெறக்கூடும். வெற்றி வித்தியாசம் சுமார் 14% வரை இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இங்குள்ள சமூகக் கட்டமைப்பு அதிமுகவிற்குச் சாதகமாக இருப்பதால், அவிநாசி மீண்டும் இரட்டை இலை வசமாகவே அதிக வாய்ப்புகள் உள்ளன.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.