திருப்பூர் வடக்கு சட்டமன்ற தொகுதி  
தமிழ்நாடு

திருப்பூர் வடக்கு.. கொங்கு சீமையில் யாருக்கு வாய்ப்பு அதிகம்? மாலை முரசு - கான்சிலிடிக்ஸ் பரபரப்பு ரிப்போர்ட்!

நகர் முழுவதும் தேங்கும் குப்பைகள் இத்தொகுதியின் பிரதான பிரச்சனைகளாகப் பட்டியலிடப்படுகின்றன...

மாலை முரசு செய்தி குழு

"மாலை முரசு - கான்சிலிடிக்ஸ்" இணைந்து தமிழகம் முழுவதும் நடத்திய மாபெரும் கருத்துக்கணிப்பு முடிவுகள் குறித்து "Tamil Nadu Political League" நிகழ்ச்சியில் திருப்பூர் வடக்கு தொகுதி பற்றியும், வரும் 2026 சட்டமன்ற தேர்தலில் அங்கு வெற்றிப் பெற அதிகம் வாய்ப்புள்ள கூட்டணி எது? என்பது குறித்த தகவல்கள் இங்கே விரிவாகத் தரப்பட்டுள்ளன.

வாக்காளர் விவரம் மற்றும் சமூகக் காரணிகள்:

திருப்பூர் வடக்கு தொகுதியில் 18 முதல் 25 வயதுடைய இளைய தலைமுறை வாக்காளர்கள் 12.67% ஆக உள்ளனர். சமூக ரீதியாக, வெள்ளாள கவுண்டர்கள் 34%, முதலியார்கள் 15%, அருந்ததியர்கள் 14% மற்றும் ஆதிதிராவிடர்கள் 8% என உள்ளனர். மற்ற சமூகத்தினர் 24% உள்ளனர். இது 93% நகர்ப்புறங்களைக் கொண்ட ஒரு முழுமையான தொழில் சார்ந்த தொகுதியாகும். இங்கு சுமார் 10,000 முதல் 15,000 வரை வட இந்தியப் புலம்பெயர் தொழிலாளர்களின் வாக்குகள் வெற்றியைத் தீர்மானிக்கும் சக்தியாக உள்ளன.

திருப்பூர் வடக்கு தொகுதி பற்றிய முழு கருத்து கணிப்பை காணொளியாக காண : இங்கே கிளிக் செய்யவும்

உள்ளூர் பிரச்சனைகள்:

பின்னலாடைத் தொழிற்சாலைகளின் கழிவுகளால் நொய்யல் ஆறு கடுமையான மாசடைந்துள்ளது. ஜிஎஸ்டி மற்றும் வரி உயர்வால் சிறு மற்றும் குறு நிறுவனங்கள் சந்திக்கும் நஷ்டம் ஒரு முக்கிய அரசியல் காரணியாக உள்ளது. வெளிமாநிலத் தொழிலாளர்களுக்குத் தங்குவதற்கு முறையான வசதிகள் இல்லாமை மற்றும் நகர் முழுவதும் தேங்கும் குப்பைகள் இத்தொகுதியின் பிரதான பிரச்சனைகளாகப் பட்டியலிடப்படுகின்றன.

தேர்தல் முடிவுகள் ஒப்பீடு (2021 vs 2024):

2021-ல் அதிமுக 48% வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றது. 2024 நாடாளுமன்றத் தேர்தலில் திமுக 41.22% வாக்குகளைப் பெற்றுத் தனது நிலையை உயர்த்தியுள்ளது. அதிமுக தனது வாக்கு வங்கியை 46.8% என்ற அளவில் வலுவாகத் தக்கவைத்துள்ளது. நாம் தமிழர் கட்சி 10.5% வாக்குகளைப் பெற்று ரட்டை இலக்கத்தைத் தொட்டுள்ளது.

2026 தேர்தல் கணிப்பு - பூத் லெவல் ஆய்வு:

2021-ல் அதிமுக 145 பூத்களில் வலுவாக இருந்தது, தற்போது அது 98 ஆகக் குறைந்துள்ளது. திமுக 89 பூத்களிலிருந்து 125 ஆகத் தனது பலத்தை உயர்த்தியுள்ளது. இருப்பினும், வரும் 2026 தேர்தலில் அதிமுக 115 பூத்களில் மீண்டும் வலுவடைய வாய்ப்புள்ளது. திமுக 95 பூத்களில் ஸ்ட்ராங்காக உள்ளது. சுமார் 40 பூத்கள் ஸ்விங் பூத்களாக உள்ளன.

கான்சிலிடிக்ஸ் கணிப்பின்படி, வரும் தேர்தலில் அதிமுக 38% வாக்குகளையும், திமுக 32% வாக்குகளையும் பெறும். இரு கட்சிகளுக்கும் இடையே சுமார் 6% வித்தியாசம் இருக்கும். தமிழக வெற்றிக் கழகம் மற்றும் நாம் தமிழர் கூட்டணி இணைந்து 25% வாக்குகளைப் பிரிக்கும். வட இந்திய வாக்காளர்களின் ஆதரவு மற்றும் சமூகக் கட்டமைப்பு காரணமாகத் திருப்பூர் வடக்கு தொகுதி மீண்டும் அதிமுக வசம் செல்லவே அதிக வாய்ப்புகள் உள்ளன.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.