தமிழ்நாடு

பிரதமர் மோடியுடன் நாளை ஓ.பி.எஸ், இ.பி.எஸ் ஆலோசனை

டெல்லியில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் பிரதமர் நரேந்திர மோடியை  நாளை சந்தித்து ஆலோசனை நடத்த உள்ளனர்.

Malaimurasu Seithigal TV
டெல்லியில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் பிரதமர் நரேந்திர மோடியை  நாளை சந்தித்து ஆலோசனை நடத்த உள்ளனர்.
அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் பிரதமர் மோடி மற்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோரை சந்தித்து ஆலோசனை நடத்துவதற்காக இன்று டெல்லி சென்றார். பிரதமர் மோடியின் அழைப்பின் பேரிலேயே, அவர் டெல்லி சென்றதாக கூறப்பட்டது. டெல்லியில் உள்ள தமிழ்நாடு இல்லத்தில் தங்கியுள்ள அவர், நாளை  நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள பிரதமர் அலுவலகத்தில் மோடியை சந்தித்து ஆலோசனை நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. அதிமுகவில் உள்கட்சிக் குழப்பம் நாளுக்குநாள் அதிகரித்து வரும் நிலையில், ஓ.பன்னீர்செல்வம் மட்டும் தனியாக டெல்லி சென்றது பல்வேறு சர்ச்சைகளையும், யூகங்களையும் கிளப்பியது. 
இந்நிலையில் நாளை நடைபெறும் பிரதமர் மோடியுடனான சந்திப்பில், அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமியும் கலந்து கொள்ள உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சட்டப்பேரவைத் தேர்தல் தோல்விக்கு பிறகு முதன்முறையாக இருவரும் பிரதமர் மோடியை சந்திக்க உள்ளதால், இந்த சந்திப்பு அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.