தமிழ்நாடு

ஓ.பி.எஸ், இ.பி.எஸ் - க்கு வேறு வழியில்லாமல் பாஜக அலுவலக வாசலில் நிற்கிறார்கள் - சசிகலா

Malaimurasu Seithigal TV

அதிமுக தொண்டர்களின் மன நிலையை சரியாக   புரிந்து கொள்ளாததால் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் பாஜக அலுவலக வாசலில் நின்று தேர்தலுக்கு கூட்டணி கேட்கிறார்கள் என மன்னார்குடியில் வி.கே.சசிகலா பேட்டியளித்தார்.


திருவாரூர்  மாவட்டம் மன்னார்குடி அருகே சுந்தரக்கோட்டையில் செங்கமல தாயார் கல்வி அறக்கட்டளை சார்பில் கல்லூரியில்  நடைபெற்ற நிறுவனர் தின கலை வார விழாவில்  வி.கே. சசிகலா கலந்து கொண்டார் பின்னர் பேசிய வி.கே. சசிகலா.

அதிமுக தொண்டர்களின் முடிவு தான் என்னுடைய முடிவு

அதிமுக தொண்டர்களின் மன நிலையை சரியாக   புரிந்து கொள்ளாததால் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் பாஜக அலுவலக வாசலில் நின்று தேர்தலுக்கு கூட்டணி கேட்கிறார்கள்  இரண்டு மூன்று பேர் சேர்ந்து முடிவு எடுக்க முடியாது அந்த மாதிரி  எடுக்கிற கட்சி திமுக தான்.  அதிமுக தொண்டர்களின் முடிவு தான் என்னுடைய முடிவு நான் தனிப்பட்ட முடிவை எடுப்பதில்லை.

இரட்டை சின்னத்தை யாராலும் அசைக்க முடியாது. நான் உயிருடன் இருக்கும் போது கட்சி பிளவபட  எந்த கட்டத்திற்கும்  விடமாட்டேன்.   பொதுச்செயலாளர் என்ற பதவியோ இதையெல்லாம் கொடுக்கக்கூடிய  இடத்தில் யார் இருக்கிறார்கள் என்றால்  அதிமுக தொண்டர்கள் தான் இருக்கிறார்கள்  தேர்தல் சமயத்தில் பெட்டியை தூக்கி கொண்டு ஊர் ஊராக சென்று மனுக்களை பெற்று ஏமாற்றியது யார் என்பது மக்களுக்கு நன்றாக தெரியும் மு.க. ஸ்டாலின் பெற்ற கோரிக்கை மனுக்கள் அடங்கிய பெட்டியின் சாவி தொலைந்து விட்டதாக கருதுகிறேன் நம்ம சரியாக இருந்தால் போதும்  ஒருவரை  ஒருவர் திட்டிக்கொள்ளாமல்  இருவரும் ஒன்றினைந்து அரசியல்  பணியாற்ற வேண்டும்  எடப்பாடி பழனிச்சாமி மற்றும் ஒ.பி.எஸ். இணைக்கும் வகையில்  நான்  அத்தனை முயற்சிகளை எடுத்து வருகிறேன் பாராளுமன்ற தேர்தல் வருவதற்குள்  நிச்சயம் அதிமுக ஒன்றினையும்  என தெரிவித்தார்.