கனமழையால் சென்னை பெரும் பாதிப்பை சந்தித்துள்ளது. மழைநீர் சூழ்ந்த பகுதியில் வசிக்கும் மக்கள், வடியாத நீருடன் மின்சாரம் இன்றி கடும் இன்னல்களுக்கு ஆளாகினர். இந்நிலையில், மழை பாதித்த சென்னை பகுதிகளை எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி நேரில் ஆய்வு செய்தார். தாம்பரம், கீழ்கட்டளை, சோளிங்கநல்லூர், கோவிலம்பாக்கம், காரப்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளை ஆய்வு செய்து மக்களுக்கு உணவு உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார். கொட்டிவாக்கம், தரமணி, வேளச்சேரி, தேனாம்பேட்டை, மயிலாப்பூர் தெப்பக்குளம், அருந்ததியர் நகர் உள்ளிட்ட பகுதிகளில் மழைவெள்ள பாதிப்பை ஆய்வு செய்து, எடப்பாடி பழனிசாமி நலவுதவிகளை வழங்கவுள்ளார்.
இதேபோல் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் சைதாப்பேட்டை, கோட்டூர்புரம், விருகம்பாக்கம், வில்லிவாக்கம் உள்ளிட்ட மழை தேங்கிய இடங்களில் நேரில் ஆய்வு செய்தார். பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு மற்றும் நிவாரண உதவிகளையும் வழங்கினார்.