தமிழ்நாடு

ஓ.பி.எஸ். ஆதரவாளர்களிடையே தள்ளுமுள்ளு...!விமான நிலையத்தில் பரபரப்பு!!

Tamil Selvi Selvakumar

சென்னை விமான நிலையத்தில் ஒ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர்கள் மோதிக் கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

மதுரை செல்வதற்காக சென்னை விமான நிலையம் வருகை தந்த முன்னாள் முதலமைச்சர் ஒ.பன்னீர்செல்வதை வழியனுப்ப அவரது ஆதரவாளர்கள் விமான நிலையம் வந்திருந்தனர்.

அப்போது செங்கல்பட்டு மேற்கு மாவட்ட செயலாளர் வைரமுத்து தரப்பினருக்கும், மாவட்ட அம்மா பேரவை நிர்வாகி இளங்கோ தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

ஒருகட்டத்தில் வாக்குவாதம் முற்றியதை அடுத்து இருதரப்பினரும் தள்ளுமுள்ளுவில் இறங்கினர். இதனையடுத்து, முன்னாள் எம்.எல்.ஏ., வெங்கட்ராமன் உள்ளிட்ட நிர்வாகிகள் சமாதானம் செய்தனர். இதனால் சென்னை விமான நிலையத்தில் சற்று பரபரப்பு ஏற்பட்டது.