தமிழ்நாடு

ஓ.பி.எஸ் ஆதரவாளர்கள் இபிஎஸ் உருவபொம்மையை எரித்து போராட்டம்...!

Tamil Selvi Selvakumar

அ.தி.மு.க பொதுக்குழுவில்  ஓ. பன்னீர் செல்வம் அவமதிக்கப்பட்டதைக் கண்டித்து தேனி மாவட்டம் உத்தமபாளையத்தில் இபிஎஸ் உருவபொம்மை எரிக்கப்பட்டது.  

ஓபிஎஸ்சுக்கு எதிராக சர்வாதிகார போக்கை கடைப்பிடித்து,  தண்ணீர் பாட்டில் வீசிய நபர்களை கண்டித்தும்  கூட்டத்திலிருந்து வெளிநடப்பு செய்யும் சூழ்நிலையை ஏற்படுத்திய எடப்பாடி பழனிச்சாமிக்கு கண்டனம் தெரிவித்தும் அவரது உருவபொம்மை எரிக்கப்பட்டது.

ஈபிஎஸ் உருவ பொம்மையை சாலையில் போட்டு எரித்து காலணியால் தாக்கியதுடன் எடப்பாடி ஒழிக எனவும் முழக்கமிட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.