இரட்டை இலை சின்னம் ஒதுக்கீடு வழக்கு தொடா்பான கேள்விக்கு ஓ.பன்னீா்செல்வம் பதிலளிக்காமல் சென்றது சா்ச்சையை ஏற்படுத்தியது.
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் நடந்த அதிமுக நிா்வாகி இல்ல திருமண விழாவில் கலந்து கொள்வதற்காக ஓ.பன்னீா்செல்வம் வந்தாா். பின்னா் அவா் மணமக்களை வாழ்த்திவிட்டு புறப்பட்டாா். அப்போது செய்தியாளா்கள் அவாிடம் இரட்டை இலை சின்னம் ஒதுக்கீடு வழக்கு குறித்து கேள்வி எழுப்பினா். அதற்கு அவா் பதிலளிக்காமல் காாில் ஏறி புறப்பட்டு சென்றாா். இது அப்பகுதியில் சலசலப்பை ஏற்படுத்தியது.
-நப்பசலையார்
இதையும் படிக்க: ”டெல்லியின் கட்டளைகளை நடைமுறைப்படுத்துவதே அதிமுகவின் வேலை.....” அமைச்சர் முத்துசாமி!!!