தமிழ்நாடு

செவிலியர்களுக்கு ஊக்க மதிப்பெண் வழங்க உத்தரவு...!

Malaimurasu Seithigal TV

கொரோனா காலத்தில் பணியாற்றிய செவிலியர்களுக்கு, கிராம சுகாதார செவிலியர் நியமனத்தில் ஊக்க மதிப்பெண் வழங்கி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. 

தமிழக அரசு கொரோனா காலத்தில் பணியாற்றிய செவிலியர்களுக்கு, கிராம சுகாதார செவிலியர் நியமனத்தில் ஊக்க மதிப்பெண் வழங்கி அரசாணை வெளியிட்டுள்ளது. அந்த அரசாணையில், கிராம சுகாதார செவிலியர் நியமனத்தில் கொரோனா கால கட்டங்களில் 6 முதல் 12 மாதங்கள் வரை  பணியாற்றியவர்களுக்கு 2 மதிப்பெண்களும், 12 முதல் 18  மாதங்கள் வரை பணியாற்றியவர்களுக்கு 3 மதிப்பெண்கள் வழங்கவும் உத்தரவிட்டுள்ளது. 

அதேபோல, 18 மாதங்கள் முதல் 24  மாதங்கள் வரை பணியாற்றியவர்களுக்கு 4  மதிப்பெண்களும், 24 மாதங்களுக்கு மேல் பணியாற்றியவர்களுக்கு 5 மதிப்பெண்களும் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.