தமிழ்நாடு

முகக்கவசம் அணிவதை கட்டாயமாக்க உத்தரவு...!

Tamil Selvi Selvakumar

தமிழ்நாட்டில் உள்ள அனைத்து சுகாதார நிலையங்களிலும் முகக்கவசம் அணிவதை கட்டாயமாக்குமாறு பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு துறை இயக்குனரகம் உத்தரவிட்டுள்ளது. 

கடந்த சில வாரங்களாக உலகளவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு மார்ச் முதல் வாரத்தில் இருந்ததை விட தற்போது 6 மடங்கு அதிகரித்துள்ளது. இந்த நிலையில் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு துறை இயக்குனர், அனைத்து மாவட்ட சுகாதார துணை இயக்குனர்கள், சுகாதார அலுவலர்கள் மற்றும் மாநகராட்சி ஆணையர்களுக்கு கடிதம் எழுதி உள்ளார். அதில், அனைத்து சுகாதார நிலையங்களிலும் முகக்கவசம் அணிவதை கட்டாயமாக்குமாறும், தேவைப்பட்டால் தமிழ்நாடு பொது சுகாதாரச் சட்டம் 1939 இன் விதிகளை பயன்படுத்தி முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்படும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.  

தமிழ்நாட்டில் மேலும் 139 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக ஐக்கிய அமீரகத்தில் இருந்து தமிழ்நாட்டிற்கு வந்த ஒருவருக்கு விமான நிலையத்தில் பரிசோதனை செய்தபோது தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.