தமிழ்நாடு

உதயநிதியின் பிறந்த நாள் நேற்று கொண்டப்பட்டதை முன்னிட்டு உடல் உறுப்பு தானம்...

Malaimurasu Seithigal TV

படூர் ஊராட்சியில் திருவல்லிக்கேணி - சேப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு பல்வேறு  நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் 47 பேர் உடல் உறுப்பு தானம் செய்துள்ளனர்.

திமுக மாநில இளைஞரணி செயலாளரும் சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலின் நேற்று தனது 45 து பிறந்த நாளை சிறப்பாக கொண்டாடினார்.அவர் பிறந்த நாளை முன்னொட்டு அவரது தொண்டர்கள் பல இடங்களில் இனிப்புகள் வழங்கியும்,பட்டாசுகள் வழங்கியும்,அன்னதானம் செய்தும் ,நலத்திட்ட உதவிகள் செய்து சிறப்பாக கொண்டாடி வந்தனர்.பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரம் போன்றவற்றை அளித்து மக்களிடையே புத்துணர்ச்சியை ஏற்படுத்தினர்.மேலும் மெரினாவில் மாபெரும் விசைப்படகு போட்டி ஒன்றை நடத்தி பரிசுகளை வழங்கி வந்தனர்.


இந்நிலையில்,செங்கல்பட்டு மாவட்டம் ஓஎம்ஆர் சாலையில் உள்ள படூர் ஊராட்சி மன்ற தலைவர் தாரா சுதாகர் ஏற்பாட்டில் 100 அடி உயரம் கொண்ட கொடி கம்பத்தில் கழக கொடியேற்றி ஏழை எளியோர்க்கும் மாணவர்களுக்கும் நலத்திட்ட உதவிகள் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது. 

பின்னர் ரத்த தானம் மற்றும் உடல் உறுப்பு தானம் செய்வதற்கான விண்ணப்ப படிவம் வழங்கப்பட்டதில் 47 பேர் உடல் உறுப்பு தானம் செய்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளனர்.