தமிழ்நாடு

தமிழ்நாட்டில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் - வைகோ கண்டனம்!

Malaimurasu Seithigal TV

சாதிவாரி கணக்கெடுப்பு வேண்டும் என்பதுதான் மதிமுகவின் கருத்து என்று அக்கட்சியின் பொதுச் செயலாளர் வைகோ கூறியுள்ளார்.

சென்னை எழும்பூரில் உள்ள மதிமுக அலுவலகத்தில் அக்கட்சி உருவாக  உயிர்நீத்தவர்களின் நினைவு நாளை முன்னிட்டு மதிமுக பொதுசெயலாளர் வைகோ வீரவணக்கம் செலுத்தினார். 

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய வைகோ, 13 கோடி மக்கள் தொகை கொண்ட பீகாரில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தி முடிக்கப்பட்டதைப் போல், தமிழ்நாட்டில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று கூறினார்.

தொடர்ந்து பேசியவர், நாடாளுமன்ற தேர்தலுக்கு தொகுதி பங்கீடு குறித்து திமுகவுடன் இன்னும் பேச்சுவார்த்தை தொடங்கவில்லை என்றும் கூறினார்.