அரியலூர் அருகே நடைபெற்ற கருத்துக் கேட்புக் கூட்டத்தில் பங்கேற்ற சிறிது நேரத்திலேயே மாவட்ட ஆட்சியர் வெளியேறியதால் பொதுமக்கள் அதிருப்தியடைந்தனர்.
அரியலூர் மாவட்டம் கயர்லாபாத் கிராமத்தில் டால்மியா சிமெண்ட் ஆலை சுண்ணாம்புக்கல் சுரங்கம் அமைக்க தமிழ்நாடு சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் சார்பில் பொது மக்கள் கருத்துக் கேட்பு கூட்டம் நடைபெற்றது.
கல்லங்குறிச்சி தனியார் மண்டபத்தில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் ஆனி மேரி ஸ்வர்ணா தாமதமாக பங்கேற்ற நிலையில், பொதுமக்கள் தங்களது கருத்துகளை பதிவு செய்து கொண்டிருந்தனர்.
இதைக் கேட்டுக் கொண்டிருந்த ஆட்சியர் சிறிது நேரத்திலேயே கருத்து கேட்பு கூட்டத்திலிருந்து வெளியேறியதால் யாரிடம் கருத்து கூறுவது என்று பொதுமக்கள் குழப்பமடைந்தனர்.