தமிழ்நாடு

ப.சிதம்பரம் தலைமையில் காங்கிரஸ் பேரணி!

Malaimurasu Seithigal TV

முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் தலைமையில் காங்கிரஸ் கட்சி சார்பில் 75 வது சுதந்திர தினம் மற்றும் மோடி அரசை கண்டித்தும் நடைபெற்ற பாத யாத்திரை. 

 சிவகங்கையில் முன்னாள் ஒன்றிய அரசின் நிதியமைச்சர் ப.சிதம்பரம் தலைமையில் 75 வது சுதந்திர தினத்தை முன்னிட்டும், மத்திய மோடி அரசை கண்டித்தும்  பாதயாத்திரை நடைபெற்றது. இந்திய ஒன்றியத்தின் 75 ஆவது சுதந்திர தினத்தில் காங்கிரஸ் கட்சியின் பங்கு மற்றும் தற்போதைய மத்திய மோடி அரசின் மக்கள் விரோத போக்கை கண்டித்தும் காங்கிரஸ் கட்சி சார்பில் நடை பயணம் இந்தியா முழுவதும் நடைபெற்று வருகிறது.

இதன் ஒரு பகுதியாக முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரத்தின் சொந்த தொகுதியான சிவகங்கை மாவட்டத்தில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் காரைக்குடியில் இருந்து பாதயாத்திரையானது துவங்கப்பட்டு நடைபெற்று வருகிறது.

 இந்நிலையில் நேற்று மாலை சிவகங்கை காஞ்சிரங்காலில் இருந்து துவங்கிய நடை பயணத்தை முன்னாள் ஒன்றிய அரசின் நிதியமைச்சர் ப.சிதம்பரம் மற்றும் முன்னாள் ஒன்றிய இணை அமைச்சர் சுதர்சன நாச்சியப்பன் மகன் ஜெய்சிம்மன் ஆகியோர் பங்கேற்று துவங்கி வைத்தனர். மேலும் சுமார் 2 கி.மீ தூரம் நகரின் முக்கிய வீதிகளில் நடந்து சென்ற ப.சிதம்பரம் அரண்மனை வாசல் முன்பு பொது மக்கள் மத்தியில் உரையாற்றி முடித்து வைத்த நிலையில் இன்று மாலை மீண்டும் வந்து கலந்துகொண்ட ப.சிதம்பரம், மற்றும் மண்டல ஒருகிணைப்பாளர் ஜெயசிம்மன் ஆகியோர் நடைபயணத்தை 2 கி.மீ தூரம்வரை நடந்து சென்று மீண்டும் துவங்கிவைத்தனர்.