தமிழ்நாடு

கோவையில் மேம் பாலத்தில் பாலஸ்தீன கொடி: 3 பேர் மீது வழக்கு பதிவு..!

Malaimurasu Seithigal TV

கோவை உக்கடத்தில் கட்டப்பட்டு வரும் மேம்பாலத்தின் மீது பாலஸ்தீன கொடியை பறக்கவிட்ட 3 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. 

கோவை உக்கடம் அருகே, கடந்த 24-ம் தேதி அனைத்து ஜமாத் இஸ்லாமிய அமைப்புகள் மற்றும் அரசியல் கட்சிகள் சார்பில், பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக, ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

அப்போது, அப்பகுதியில் கட்டப்பட்டு வரும் புதிய பாலத்தின் மீது பாலஸ்தீன கொடி பறக்க விடப்பட்டிருந்தது. இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

இதில், ஜமாத் அமைப்பை சேர்ந்த சபீர் அலி, மனித நேய மக்கள் கட்சியை சேர்ந்த அபுதாஹிர், ரபீக் ஆகியோர் மீது, 3 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.