தமிழ்நாடு

தியாகராஜ சுவாமி ஆலயத்தில் பங்குனி உத்திர ஆழித்தேரோட்ட விழா.. இன்று கொடி ஏற்றத்துடன் தொடக்கம்

திருவாரூர் தியாகராஜ சுவாமி ஆலயத்தில் பங்குனி உத்திர ஆழித்தேரோட்ட விழா இன்று கொடி ஏற்றத்துடன் துவங்கியது.

Malaimurasu Seithigal TV

சைவ சமயத்தின் தலைமைப் பீடமாக திகழும், பூமியில் தோன்றிய முதல் ஊர் என அழைக்கப்படும் திருவாரூர் அருள்மிகு தியாகராஜ சுவாமி ஆலயத்தில் பங்குனி உத்திரதிருவிழா மற்றும் ஆழித்தேரோட்ட விழா இன்று காலை கொடி ஏற்றத்துடன் துவங்கியது. 

இதையொட்டி காலை 6.30 மணிக்கு வினாயகர், சுப்ரமணியர், அருள்மிகு சந்திரசேகரர், சண்டிகேஸ்வரர் ஆகிய சுவாமிகள் அலங்கரிக்கப்பட்டு, வீதியுலா வந்து மூலவர் வன்மீக நாதர் சன்னதி எதிரே வந்த பின் 54 அடி உயரம் கொண்ட புதிய கொடி மரத்திற்கு திரவியம், மஞ்சள், பால், சந்தனம் ஆகியவற்றை கொண்டு அபிஷேகம் நடைபெற்றன.