தமிழ்நாடு

பண்ருட்டி: லாரி டயர் வெடித்து விபத்து...!

பண்ருட்டியில் அகல் விளக்கு ஏற்றி வந்த லாரி டயர் வெடித்து விபத்து..!

Malaimurasu Seithigal TV

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் பகுதியில் இருந்து லாரி ஒன்று, 12 டன் அகல் விளக்குகளை, ஏற்றிக் கொண்டு பெங்களூர் நகருக்கு சென்றுகொண்டிருந்தது. அப்போது அந்த லாரி பண்ருட்டி வழியாக, சென்று கொண்டு இருந்தபோது,  அங்குசெட்டிப்பாளையம் என்ற இடத்தில், லாரியின் முன் பக்க டயர் திடீர் என வெடித்து, தாறுமாறாக ஓடி பாலத்தின் மீ ஏறி நின்றது. 

இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக, லாரி ஓட்டுநர் பரசுராமன் உயிர் தப்பினார். மேலும் அந்த பகுதி முக்கிய சாலை என்பதால் வாகனங்கள் செல்வதில்,  போக்குவரத்து இடையுறு ஏற்பட்டது. பின்னர், போக்குவரத்து போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து, போக்குவரத்தை சரி செய்தனர். இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் கடும் போக்குவரத்து பாதிப்பு ஏற்ப்பட்டது.