தமிழ்நாடு

பல நூறு ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த பப்பாளி மரங்கள் சேதம்...! விவசாயிகள் வேதனை..!

ஸ்ரீவில்லிபுத்தூரில் நேற்று வீசிய பலத்த காற்று காரணமாக பல நூறு ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த பப்பாளி மரங்கள் முறிந்து விழுந்து நாசம்...!

Malaimurasu Seithigal TV

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் நேற்று வீசிய பலத்த காற்றினால் ஆயிரக்கணக்கான பப்பாளி மரங்கள் சாய்ந்து நாசமாயின. ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரப் பகுதியில் உள்ள கிராமங்களில் தென்னை, வெங்காயம், கடலை, நெல், பப்பாளி உள்ளிட்ட பயிர்கள் பயிரிடப்பட்டு வருகிறது. 

இந்நிலையில் கடந்த இரண்டு நாட்களாக ஸ்ரீவில்லிபுத்தூர் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த காற்றுடன் சாரல் மழை பெய்து வருகிறது. நேற்று இரவு அடித்த பலத்த சூறைக்காற்றினால், ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள பூவாணி கிராமத்தில் வெங்கடேசன் என்ற விவசாயிக்கு சொந்தமான 2 ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த பல லட்சம் மதிப்புள்ள ஆயிரக்கணக்கான பப்பாளி மரங்கள் முறிந்து விழுந்து நாசமாயின. இதனால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.