தமிழ்நாடு

நாங்கெல்லாம் விமானத்திலே ’தம்’ அடிப்போம்… புகைபிடித்து ரகளையில் ஈடுபட்ட பயணி கைது  

நடு வானில் பறந்து கொண்டிருந்த விமானத்திற்குள் தஞ்சையை சேர்ந்த பயணி ஒருவர் தடையை மீறி  புகைப்பிடித்து ரகளையில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Malaimurasu Seithigal TV

நடு வானில் பறந்து கொண்டிருந்த விமானத்திற்குள் தஞ்சையை சேர்ந்த பயணி ஒருவர் தடையை மீறி  புகைப்பிடித்து ரகளையில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

துபாயில் இருந்து இண்டிகோ விமானம் 149 பயணிகளுடன் சென்னை விமான நிலையத்திற்கு வந்தது. இந்நிலையில் விமானம் நடுவானில் பறந்துகொண்டிருந்த போது, தஞ்சை மாவட்டத்தை சேர்ந்த முகமது ரபீக் என்பவர், தான் மறைத்து வைத்திருந்த சிகரெட் மற்றும் லைட்டரை எடுத்து புகை பிடிக்க தொடங்கியுள்ளார். இதற்கு சக பயணிகள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், விமான ஊழியர்களும் அவரை கண்டித்துள்ளனர். இருந்தும் அவர் கண்டுகொள்ளாமல் புகைபிடித்துள்ளார்.

இந்நிலையில், விமானம் தரையிறங்கியதும் அவரை விமான நிலைய போலீசார் கைது செய்தனர். அவர் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.