தமிழ்நாடு

பசும்பொன் முத்துராமலிங்க தேவர் ஜெயந்தி...! பாதுகாப்பு பணியில் போலீசார் குவிப்பு..!

Malaimurasu Seithigal TV

பசும்பொன் முத்துராமலிங்க தேவர் ஜெயந்தி மற்றும் குருபூஜை விழா கொண்டாடப்படுவதை முன்னிட்டு 10 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

சுதந்திரப் போராட்ட வீரரும் ஆன்மீகவாதியுமான பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் 115 ஆவது குரு பூஜை மற்றும் ஜெயந்தி விழா இன்று நடைபெறவுள்ளது. இதனை முன்னிட்டு, ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் உள்ள தேவர் நினைவிடத்திலும், சென்னை நந்தனத்தில் உள்ள சிலைக்கும் தமிழக அரசின் சார்பில் அமைச்சர்கள் மரியாதை செய்ய உள்ளனர். உடல்நலக் குறைவு காரணமாக முதலமைச்சர் முக ஸ்டாலின் தேவர் நினைவு குருபூஜையில் பங்கேற்காத நிலையில், மூத்த அமைச்சர்கள் மற்றும் எம்.எல்.ஏ உதய நிதி ஸ்டாலின் உள்ளிட்டோர் கலந்து கொள்ள உள்ளனர்.

இந்நிலையில், தேவர் ஜெயந்தியை முன்னிட்டு அவரது நினைவிடம் அமைந்துள்ள பசும்பொன் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் பத்தாயிரம் போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். பாதுகாப்பை பலப்படுத்தும் பொருட்டு அப்பகுதியில் டிரோன்கள் பறக்கத் தடை விதித்து காண்காணிப்பு பணியில் காவலர்கள் ஈடுபட்டுள்ளனர்.