ஆந்திர துணை முதல்வரும், ஜனசேனா தலைவருமான பவன் கல்யாண், தமிழ்நாடு அரசியல்வாதிகளை நோக்கி ஒரு பெரிய விவாதக் கல்லை வீசியிருக்கார். மார்ச் 14, 2025 அன்று, ஜனசேனாவின் 12வது ஆண்டு விழாவுல பேசின அவர், "தமிழ்நாடு அரசியல்வாதிகள் இந்தியை எதிர்க்கிறாங்க, ஆனா அதே இந்தியில தங்கள் படங்களை டப்பிங் பண்ணி பணம் சம்பாதிக்கிறாங்க - இது என்ன மாதிரியான logic?"னு கேட்டு ஒரு சர்ச்சையை கிளப்பியிருக்கார். இது தமிழ்நாட்டு அரசியல் வட்டாரத்துல பெரிய புயலை கிளப்ப, நடிகர் பிரகாஷ் ராஜ் பதிலடி கொடுத்து, DMK ஆதரவு ட்விட்டர் கைப்பிடிகள் எதிர்ப்பு தெரிவிச்சு சமூக வலைதளங்களை சூடாக்கியிருக்காங்க. இதுபற்றி இன்னும் விரிவா பார்ப்போம்.
பவன் கல்யாண் பேச்சு - என்ன சொன்னார்?
மார்ச் 14, 2025 அன்று, பிதாம்புரத்தில் (காக்கிநாடா மாவட்டம்) நடந்த ஜனசேனா பவுண்டேஷன் டே நிகழ்ச்சியில பவன் கல்யாண் பேசினார். அவர் சொன்ன முக்கிய பாயிண்ட்ஸ் இதோ:
இந்தி எதிர்ப்பு vs பணம்: "தமிழ்நாடு அரசியல்வாதிகள் இந்தியை எதிர்க்கிறாங்க, ஆனா அதே இந்தியில தங்கள் தமிழ் படங்களை டப்பிங் பண்ணி பாலிவுட்டுல இருந்து பணம் சம்பாதிக்கிறாங்க. இது என்ன புரியாத logic? இந்தியை வெறுக்கிறேன் சொல்றவங்க, பணம் வாங்குறதுக்கு மட்டும் ஏன் இந்தி ஓகே ஆகுது?"
மொழி பன்முகத்தன்மை: "இந்தியாவுக்கு பல மொழிகள் தேவை - தமிழ் உட்பட. ரெண்டு மொழிகள் மட்டும் போதும்னு சொல்ல முடியாது. நாம மொழி பன்முகத்தன்மையை ஏத்துக்கணும், அது நாட்டோட ஒற்றுமைக்கும் அன்புக்கும் அவசியம்."
DMK மீது மறைமுக தாக்குதல்: DMK-வை நேரடியா பேர் சொல்லாம, "அரசு பள்ளிகள்ல இந்தியை படிக்க விட மாட்டோம்னு சொல்றவங்க, தங்கள் private schools-ல இந்தியை படிக்க வைக்கிறாங்க. இது double standard இல்லையா?"னு கேட்டார்.
இந்த பேச்சு, தமிழ்நாட்டு அரசியல்வாதிகளை, குறிப்பா DMK-வை target பண்ணி இருந்ததால, சர்ச்சை பற்றி எரிய ஆரம்பிச்சுது.
சர்ச்சையின் பின்னணி - இந்தி எதிர்ப்பு ஏன்? பவன் கல்யாண் இப்படி பேசினதுக்கு பின்னாடி ஒரு பெரிய context இருக்கு. தமிழ்நாட்டுல DMK தலைமையிலான அரசு, National Education Policy (NEP) 2020-ல உள்ள மூணு மொழி திட்டத்தை கடுமையா எதிர்த்து வருது. CM MK ஸ்டாலின், மார்ச் 13, 2025-ல திருவள்ளூர்ல பேசினப்போ, "NEP ஒரு கல்வி கொள்கை இல்லை, இது saffronised policy. இது இந்தியாவை வளர்க்க அல்ல, இந்தியை வளர்க்க உருவாக்கப்பட்டது. இது தமிழ்நாட்டு கல்வி முறையை அழிக்கும்"னு சொன்னார்.
DMK-வின் நிலைப்பாடு: "இந்தி திணிப்பு"னு அவங்க குற்றம் சாட்டுறாங்க. ரெண்டு மொழி கொள்கையை (தமிழ் + ஆங்கிலம்) தமிழ்நாடு பின்பற்றுது. மூணாவது மொழியா இந்தியை சேர்க்க மறுக்கிறாங்க.
மத்திய அரசு பதில்: மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், "DMK-வின் இந்த முடிவு regional chauvinism-ஐ ஊக்குவிக்குது, secessionist sentiments-ஐ தூண்டுது"னு விமர்சிச்சாங்க.
இந்த பின்னணியில்தான் பவன் கல்யாண், BJP-யோட கூட்டணி தலைவரா, தமிழ்நாட்டு அரசியல்வாதிகளை குறி வைச்சு பேசியிருக்கார்.
பிரகாஷ் ராஜ் பதிலடி - "மொழி பாதுகாப்பு.. வெறுப்பு இல்லை!"
பவன் கல்யாண் பேச்சுக்கு முதல் பெரிய எதிர்ப்பு நடிகர் பிரகாஷ் ராஜ்-ல இருந்து வந்துச்சு. மார்ச் 14, 2025-ல X-ல ஒரு ட்வீட் போட்டார்:
"‘மீ ஹிந்தி பாஷையை மா மீது ருத்தகண்டி’னு சொல்றது இன்னொரு பாஷையை துவேஷிக்கிறது இல்லை, ‘ஸ்வாபிமானத்தோட மா மாத்ரு பாஷையை, மா தல்லியை காப்பாத்துறது’னு அர்த்தம். இதை பவன் கல்யாண் காருக்கு யாராவது சொல்லுங்க please… 🙏🏿 #justasking"
அர்த்தம்: "இந்தியை எதிர்ப்பது வெறுப்பு இல்லை, தமிழை பாதுகாக்கிற pride-அ சொல்றது"னு பவனுக்கு counter கொடுத்தார்.
பிரகாஷ் ராஜ் ஏற்கனவே பவன் கல்யாணோட Sanatana Dharma பேச்சுகளை விமர்சிச்சவர் (திருப்பதி லட்டு சர்ச்சை, 2024). இப்போ இந்த பேச்சையும் அவர் விடல - "பவன் சுத்தமான அரசியல் பண்ணுறார்"னு குற்றம் சாட்டினார்.
பவன் கல்யாண் இந்த பேச்சு மூலமா என்ன சாதிக்க முயற்சிக்கிறார்?
BJP கூட்டணி ஸ்டாண்ட்: ஜனசேனா, ஆந்திராவுல BJP-TDP கூட்டணியோட இருக்கு. தமிழ்நாட்டுல BJP-க்கு foothold இல்லாத நிலையில, பவன் ஒரு பிராந்திய தலைவரா DMK-வை எதிர்க்கிறதுல BJP-க்கு support கொடுக்கிறார் என்பது அரசியல் நோக்கர்களின் கருத்தாக உள்ளது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்