தமிழ்நாடு

குடியிருப்பு பகுதிகளை சூழ்ந்து நிற்கும் மழைநீரால், மக்கள் கடும் அவதி...

புதுக்கோட்டை அருகே குடியிருப்பு பகுதிகளை சூழ்ந்து நிற்கும் மழைநீரால், மக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். 

Malaimurasu Seithigal TV

புதுக்கோட்டை மாவட்டத்தில் கடந்த இரு தினங்களில் வெளுத்து வாங்கிய கனமழையால் பல பகுதிகள் வெள்ள நீரால் சூழப்பட்டுள்ளது. புதுக்கோட்டையை அடுத்த உப்புபட்டி கிராமம் வெள்ளத்தால் சூழப்பட்டுள்ளது.  பெரும்பாலான இடங்களில் வீடுகளுக்குள்ளும் மழைநீர் புகுந்துள்ளது. தண்ணீர் வெளியேற வழியில்லாத காரணத்தால், அப்பகுதியில் உள்ள சாலை இரண்டாக பெயர்க்கப்பட்டு, அதன்வழியே தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

இதனால் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளதாக வேதனை தெரிவிக்கும் கிராம மக்கள், தங்கள் பகுதியில் மழைநீர் வெளியேற வசதி செய்து தருவதோடு, சாலை உள்ளிட்ட அடிப்படை வசதிகளையும் முறைப்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர்.